டிசம்பர், 2006 க்கான தொகுப்பு

டாஸ்மாக் சட்டங்கள்

Posted in Blogroll on டிசம்பர் 14, 2006 by cablesankar

ஓரு பஸ்ஸின் பின் பக்கத்தில் மாட்டப்பட்டிருந்த ஓரு விளம்பர பலகை என்னை மிகவும் கவர்ந்தது.. அதுஓரு அரசு விளம்பரம்.. அதில் குடித்துவிட்டு கவனக்குறைவாக வண்டி ஓட்டி அதனால் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சிறைதண்டனை, அல்லது ஓட்டுனர் உரிமம் ரத்து மற்றும்.. ஏதோ ஓன்று அது என்ன என்று படிப்பதற்குள் பஸ் ஓடிவிட்டது. அதை படித்தபின் இவ்வளவு சட்டங்கள் நமது நாட்டிலிருக்கிறதா? என்று ஆச்சர்யப்பட்டேன். ஆனால் நள்ளிரவு வரை அரசு டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு, குடிக்க வரும் குடிமகன்க்ளை இப்படி செய்தால், அப்படி செய்தால் தண்டணை எனக்கூறும் விளம்பரத்தை பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஏனென்றால் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை பிடித்ததாக தம்பட்டம் வேறு அடித்துக்கொள்கிறது நமது காவல்துறை…இவர்களை பிடிப்பதற்க்கு எதற்கு கஷ்டப்பட வேண்டும். ஓவ்வொரு டாஸ்மாக் கடையின் வாசலில் உட்கார்ந்து கொண்டு கடையை விட்டு வெளியே வந்து வண்டியை எடுக்கும் குடிமகன்களை எல்லார் மீதும் நடவடிக்கை எடுத்தால் போதுமே.. குடித்துவிட்டு வண்டி ஓட்ட யாருமே இருக்க மாட்டார்கள். போலீஸின் கடமை குற்றம் நடக்காமல் தடுப்பதே.. அதை விட்டு அரசே கடையை நள்ளீரவுவரை திறந்து வைத்துவிட்டு, வாடிக்கையாளர்களை குடிக்கவிட்டு..பிறகு வண்டி ஓட்டுபவரை பிடிப்பதை விட.. அந்த தவறை நடக்கவிடாமல் செய்யலாமே.. (இந்த ஐடியாவை கொடுத்த என்னை யாரும் திட்ட வேண்டாம்)
www.shortfilmindia.com

அம்மன் கண்திறந்த கதை….

Posted in Blogroll on டிசம்பர் 14, 2006 by cablesankar

சமீபத்தில் வட சென்னையில் தண்டயார்பேட்டை என்று நினைக்கிறேன்… அங்கே இருக்கும் ஓரு அம்மன் கோவிலில் இருக்கும் அம்மன் கண்திறந்ததாக செய்தி வெளியாகி ஓரே பரபரப்பாய் இருந்தது. அதற்கு அடுத்த நாளே.. பக்கத்திலிருக்கும் இன்னொரு கோவிலில் இருக்கும் அம்மன் சிலையின் கண் திறந்த்தாக கூறப்பட்டது அது பற்றி தினத்தந்தியில் படம் கூட போடப்பட்டது. ஆனால் அதற்கு அப்புறம் அதை பற்றிய எந்த விஷயமும் வரவில்லை.. ஓரு வேளை அது வெறும் புரளியா? அல்லது நடந்தது என்ன? வீணாக ஓரு விஷயம் புரளியாக கிளம்பும் ஓன்றை வெளீயிடும் பத்திரிக்கை அது பற்றிய அடுத்த செய்தியையும் வெளீயிட வேண்டிய கடமை அதற்கு உண்டல்லவோ? எனக்கென்னவோ இது பிள்ளையார் பால் குடித்த கதை மாதிரி தான் படுகிறது. என்ன செய்வது எல்லாவற்றிக்கும் மார்கெட்டிங் தேவையாய் இருக்கிறது.. அது இந்த தடவை அந்த தண்டையார்பேட்டை அம்மன் கோவிலுக்கு யார் கொடுத்த மார்கெடிங் ஐடியாவோ…?