Uncategorized தெரிவுக்கான தொகுப்பு

Neenga Indha Madhiri Pannadeyilaya..?

Posted in Uncategorized அடையாளங்களுடன் , on அக்டோபர் 31, 2008 by cablesankar

மதியம் சுமார் 2 மணியிருக்கும் ரொம்ப அர்ஜெண்டாய் என்னுடய குதிரையை (அதாங்க..நம்ம பைக்தான் அப்படி சொல்றேன்..மனசுக்குள்ள இளவரசன்னு நினைபபு) ஓட்டி சென்று கொண்டிருந்தேன்.. அதற்கு காரணம் என்னுடய இளவரசி சுலோசனா..பெயர்தான் சுலோவே தவிர பார்ட்டி செம பாஸ்டு..சாந்தம் தியேட்டரில் ஓரு முறை ட்புள் சீட்டில் நெருக்கமாய் உட்கார்ந்திருந்த ஓரு சூட்டு தருணத்தில்,அவளை தொட்டா சுடுமோன்னு நினைச்சுக்கிட்டு இருந்த நேரத்தில..படத்தில நைட் எபெக்ட்டுல சீன் வரும் போது கிஸ் அடிச்சவ, டார்கெட் முடிக்காததால் டீம் ஹெட் காய்ச்சும் காய்ச்சலிலிருந்து தப்பிக்கும் முடிவாய் “லேடீஸ் ப்ராப்ளம்”ன்னு அவன் எதுக்கு என்னனு கேட்க முடியாதபடி பீலாவிட்டுவிட்டு, எனக்கு மிஸ்ட் கால் கொடுத்திருந்தாள்.. (எப்ப கால் பண்ணியிருக்காங்கன்னு கேட்கிறீங்களா? அதுசரி அவங்க ரிசார்ஜ் பண்ற காசுக்கு எப்பதான் பேசுவாங்க..?)உடனடியாய் வந்தால் ரொம்ப நாளாய் கேட்ட மாயாஜால், ஈ.ஸி.ஆர் என்றாள்..

தேன் குடிக்கும் நரியின் ஆவலோடு அடுத்த செகண்ட் என்னுடய டார்கெட் முடிக்காவிட்டால் ஆப்பு அடிக்கும் டீம் லீடர், இந்த மாச இன்செண்டீவ் எதுவும் என் கண்ணுக்கு தெரியவில்லை..இருட்டு ஸீனில், திருட்டு முத்தம் என்னை விரட்டியது, இந்த முறை கொஞ்சம் தைரியமாய்.. எதாவது செய்யணும் அவ கேட்கறதுக்கு முன்னாலேயே..என்று நினைத்தபடி கிரீம்ஸ் ரோடுக்குள் நுழைந்தேன்.. அவளுக்கு ஆபீஸ் அங்கே தான் சங்கீதாவில் இருப்பதாய் சொல்லியிருந்தாள். என் கண்முன்னே ரோடு தெரியவில்லை.. சுலோவே தெரிந்தாள்.. உடனே வர சொன்னதன் பலனாய் நான் முக்கால் மணி நேரம் லேட்டாய் போகிறேன்..டைம் முக்கியம் இல்லாட்டா சுலோ கக்கிடும்..அனால் இந்த கதை நான் சுலோவை பார்க சென்றதை பற்றியல்ல.. அதற்கு முன்னால் நடந்த ஓரு விஷயத்தை பற்றித்தான்

படு வேகமாய் குதிரையை விரட்டி கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஓரு பைக்காரன் (நான் என்னை தவிர மற்றவர்களை இளவரசர்களாய் கருதுவதில்லை).. என்ன நினைத்தானோ தெரியவில்லை சடாரென்று வலது பக்கம் வண்டியை திருப்பினான்.. அதை எதிர்பார்காத நான் வந்த வேகத்தில் என்னுடய குதிரையின் ப்ரேக்கை எழுந்து நின்று போட்டு ஸ்கேட்டிங் பண்ணாத குறையாய் இங்கிலீஷ் பட ஸ்டைலில் தரையெல்லாம் டயர் மார்காய் தேய்த்து கொண்டு அவனுக்கும் எனக்கும் சில பல இன்ச்கள் இடைவெளியில் மிகப் பெரிய ஓரு விபத்து தவிர்க்கபட.. என்னுடய அவசரம், பதட்டம், சுலோ காத்திருக்கும் நினைப்பு, நான் சென்ற வேகம், விபத்தை தவிர்பதற்காக என்னுடய ரிஸ்க் எல்லாம் சேர்த்து பெருங்கோபமாய் வெகுண்டெழுந்து அந்த பைக்காரனை அவனையும், அவன் குடும்பத்தையும் தெரிந்தவர்கள் கூட அப்படி திட்ட மாட்டார்கள், நான் வாய்க்கு வந்தபடி திட்ட.. அவன் எந்தவித பதட்டமும் இல்லாமல்.. நேராய் என்ன பார்த்து

“நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்?” என்றான்.

நெ.1 டிவி சேனல் எது???

Posted in Uncategorized அடையாளங்களுடன் , on செப்டம்பர் 10, 2008 by cablesankar

1  சன்

2  கலைஞர்

3 விஜய்

4 ஜெயா

5 ராஜ்

6 மக்கள்

7 தமிழன்

8 இமயம்

9 மெகா

10 வசந்த

11 விண்

en bidveritser

Posted in Uncategorized on மார்ச் 4, 2008 by cablesankar

BDV-251887-BDV

சிவாஜி.. பார்த்தாச்சா..?

Posted in Uncategorized on ஜூன் 22, 2007 by cablesankar

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகில் உள்ள 25 நாடுகளில் ஓரே சமயத்தில் சங்கரின் ‘சிவாஜி” படம் ரீலீஸ் ஆகியிருக்கிறது. கடந்த 14ஆம் தேதி முதலே.. தமிழ்நாட்டில் எல்லார் வாயிலும் “சிவாஜி டிக்கட் வாங்கிட்டியா?? வாங்க்கிட்டியா? என்ற கேள்வி தான். அப்படி ஓரு சிவாஜி ஜூரம். உலகமே எதிர்பார்க்க வைத்த ஏவிஎம். ரஜினி, சங்கர், ஏ.ஆர். ரகுமான். போன்ற ஜாம்பவான்கள் சேர்ந்திருக்கும் படம், என்வே எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும், எங்கே முதல் நாளே படத்தை பார்க்காவிட்டால் எதிர்படும் நண்பர்களிடம் அவமானப்பட வேண்டுமே என்று.. முதல் நாளே.. எனக்கு தெரிந்த தியேட்டர்களை காண்டேக்ட் செய்து, ஓரு வழியாக, 10 டிக்கெட்டை வாங்கிவிட்டேன்.. அந்த பத்து டிக்கெட்டுக்கு நான் நீ என்று போட்டி வேறு. நான் சிலருக்கு டிக்கெட் கொடுக்க முடியாமல் போக, அதனால் சில நண்பர்கள், விரோதியாக, பாவிக்க, ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் எதிர்பார்பெல்லாம், என்னுடய டிக்கெட்டை அவர்களீடம் கொடுத்தாவது, என் நட்பை நிருபிக்க, பிரயத்தனம் செய்தார்கள்.

இவ்வளவு, பரபரப்புக் கிடையே, ஓரு வழியாக, தியேட்டர் வாசலில் இருந்த நான்கு தியேட்டர் கும்பலை கடந்து, ஓரு வழியாக, நசுங்கி, பீழிந்து, உள்ளே, போனதும், படம் ஆரம்பித்துவிட்டார்கள். படம் ஆரம்பித்ததும், ரஜினியை, சிறையில் காட்டும் காட்சியில், ஓரு பத்து வருட குறைந்த இளைமையில், பார்த்ததும், நிமிர்ந்து உட்கார வைத்தார் ரஜினி, அதற்கு அப்புறம் தான் , படட்த்தில் காமெடி என்ற பெயரில், ஸ்ரேயாவின் வீட்டில் போய் ரஜினி, பழக, ஆரம்பிப்பதும், அவர்கள் தமிழ் கலாசரத்தின்படி, பழக, அனுமதிகாமல், வெளியே, அனுப்ப, எதிர்வீட்டு சாலமன் பாப்பையா.. தன் இரண்டு கரி குண்டு பெண்களை அழைத்து, அவர்களுடம் பழக, அழைக்க, ஓரே,, காமெடி என்ற பெயரில் கூத்து, அது மட்டுமில்லாம. ரஜினியோடு வரும் விவேக் ஓவர்.

அதன் பிறகு, வழக்கமான, கதை, கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்தது என்றே என்க்கு தெரியாது. ஏன் என்றால் என்னை மீறி நான் கண்யர்ந்து விட்டேன். அதற்கு அப்புறம் வரும் திருப்பம், ரஜினி, பாப்பர் ஆவது, சுமனை அவர்வீட்டில் ரெய்டு விட்டு எல்லா கருப்பு பணத்தையும் அபேஸ் செய்தவுடன் படம் முடிந்து விட்டது. அதற்கு அப்புறம் நடப்பதெல்லாம். ஓரே காமெடி. அதில் உட்சபட்சமான காமெடி, ரஜினி தனக்குத்தானே மின்சாரத்தை பாய்ச்சி கொள்வதும், சில மணி நேரங் கழித்து அவரை ரகுவரன் பிழைக்க வைப்பது,

அதற்கு அப்புறம் ரஜினி மொட்டை அடித்துவந்து, செய்யும் கூத்தெல்லாம். படு கொடுமை. படத்தில் ஓரே ஆறுதல். ரஜினி, ரஜினி, ரஜினி,

அதெல்லாம் சரி, கருப்பு பணத்தை பற்றி, பல கோடி செலவு செய்து, அந்த படத்தை வெளியிட விநியோகதர்களிடம், தினசரிகளில் மடித்து கொடுக்கப்பட்ட, கருப்பு பணத்தை எந்த சிவாஜி, பிடிங்கிக் கொள்வார்.

ஜம்பது ரூபாய்க்கு மேல் யாரும் டிக்கெட் விற்கக்கூடாது என்ற உத்தரவை, காற்றில் பறக்கவிட்டு, நூறு, இருநூறு, என்று விற்பனை செய்த தியேட்டர்காரர்கள், அவர்கள் கலைக்ட் செய்த கண்க்கில் வராத பணத்தை எந்த சிவாஜி பிடிங்கிக் க்கொள்வார்.

யாமறியேன் பராபரமே….

ஓரு தரிசனத்தின் திரைக்கதை

Posted in Uncategorized on பெப்ரவரி 25, 2007 by cablesankar

ஓரு தரிசனத்தின் திரைக்கதை

என் மனைவியின் தொந்தரவு தாங்காமல் அந்த இடத்திற்கு போக பயணப்பட்டேன். எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. எனக்கு நம்பிக்கையுமில்லை. ஆனால் அதை என் மனைவியிடம் திணிக்க எனக்கு மனமில்லை. அவள் சொன்ன இடம் ஓரு பிரபலமான சாமியாரின் ஆசிரமம். அங்கே போய் அவரை தரிசித்திவிட்டு வந்தால் எல்லா கவலைகளும், நோய்களும் போய்விடும், மன அமைதி கிடைக்குமென்றாள். அவளூக்கு என்ன அமைதி கெட்டு போய்விட்டதென்று கேட்க நினைத்து, கேட்காமல் சரி போகலாம் என்றேன்.பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணம். அங்கே போய் சேரும் போது இரவாகிவிட்டது. அதனால் அருகேயிருந்த ஓரு லாட்ஜில் அறையெடுத்து தங்கினோம். இரவு குளிர் அதிகமாக இருந்தது. போர்வையோடு சேர்த்து என் மனைவியை அணைத்து போர்த்திக் கொள்ள எத்தனித்தேன். அவள் சடாரென்று எழுந்து “என்ன நீங்கள் …. உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க… நாம என்ன ஹனிமூன் டூருக்கா வந்திருக்கோம்.. தள்ளிப்படுங்க…” என்று கட்டிலை விட்டு இறங்கி வெறும் தரையில் போய் படுத்தாள். நான் அவளை பார்த்து “சரி நான் ஓண்ணும் செய்யமாட்டேன்… மேல வந்து படு…” என்ற குரலை சற்றும் சட்டை செய்யாமல் என் குரல் கேட்காதது போல முகம் திருப்பி கண்மூடிக் கிடந்தாள். அவள் பிடிவாதம் எனக்கு தெரியும்.அதிகாலை மூண்று மணிக்கெல்லாம் என்னை எழுப்பி குளீக்க வைத்து, அந்த ஆசிரமத்தில் நுழைந்தவுடன் அங்கே இருந்த சீடர்கள், என்னையும், என் மனைவியையும், தனி, தனியே பிரித்து, அவளை பெண்கள் பக்கத்திலும், ஆண்கள் பக்கத்தில் என்னை நிற்கவைத்து, இனிமேல், திரும்ப வெளியே வரும் போதுதான் ஒன்றாய் பிரிந்த இடத்திலேயே பார்க்க முடிய்மென்று அந்த சீடர் கூற, என் மனைவி உள்ளே நுழைந்தது முதல் அந்த சாமியாரின் பேரைச் சொல்லியபடியே மெய் மறக்க ஆரம்பித்திருந்தாள். அவளுக்கு என் ஞாபகமிருக்குமா என்று சந்தேகமே..என் மனைவி சென்றவுடன் வேறு வழியில்லாமல் நானும் அங்கிருந்த ஆண்கள் ஜோதியில் கலக்க ஆரம்பித்தேன். எல்லோரும் கும்பலாய் கொஞ்சம் கூட சத்தமில்லாமல் அமைதியாய் வருவது எனக்கு அதிசயமாயிருந்தது. பொதுயிடத்தில் கூட உரத்து போன் பேசுபவர்களா? இவர்கள்? அவர்களின் ஓழுங்கு எனக்கு ஆச்சர்யபட வைத்தது. எல்லோரும் அங்கிருந்த கோயில் சந்நிதிக்கு போனவுடன் அங்கே கடவுளுக்கு ஆராதனை செய்து பூஜை முடிந்தவுடன். “டோலக்” :” ஜல் …ஜல்…”ஜால்ரா போன்ற இசை கருவிகளை எடுத்துக் பஜனை பாடலை பாடி வாசிக்க ஆரம்பித்தார்கள். அப்படியே பஜனைகளை பாடியபடி நடக்க ஆரம்பிக்க.. அந்த அதிகாலை நேர அமைதியும், ஓரே ரிதத்தில் வரும் பஜனை பாடலும் என் மனதை அந்த பஜனை ரிதத்திக்கு தலை ஆட்டச் சொன்னது. நாம் அந்த சுருதிக்கும், அந்த காலை நேர அமைதியும் செய்யும் அதிகாலை ரீங்காரம் தான் என்று என் அறிவுக்கு எட்டினாலும், எனக்கு அந்த மெல்லிய இசை தரும் போதையும், அந்த அதிகாலை குளீரும் தேவையாகத்தான் இருந்தது. நானும் அவர்களுடன் பாட ஆரம்பித்தேன்.மெல்ல பாடியபடி ஓரு ரவுண்ட் வந்து மீண்டும் ஓரு ஆரதனை முடிந்தபின், எல்லாரையும் ஓரு பரந்த மைதானத்தில் ஓரு ஆளுக்கும், மற்றோரு ஆளுக்கும் நம்முடய கையை நீட்டினால் கிடைக்கும் இடைவெளியமைத்து உட்கார வைத்தார்கள். அந்த இடத்தை பார்க்கும் போதே ஓருவித அமைதி ஏற்பட்டிருந்தது. மைதானத்தின் நடுவே ஓரு பரந்து விரிந்த ஓரு மாளிகை, ஓருவிதமான மயக்கும் ரோஜா கலரில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. அதன் பின் பக்கத்தில் பனி படர்ந்த உயர்ந்த மலைகள், சுற்றிலும் உயர்தர புற்களால் அமைக்கப்பட்டிருந்த பச்சை ஜமுக்காளம் போலிருக்கும் பனிநீர் படிந்த புல்தரையும், எங்களுக்குள் இருந்த இடைவெளியும், அதனால் ஏற்பட்ட அமைதியும், மிக அற்புதம்.சுமார் ஓரு மணி நேரத்திற்கு அப்படி உட்கார்ந்திருந்தேன்.ஓரு மனிதன் எந்த விதமான செயல்களிலும் ஈடுபடாமல் சும்மா உட்கார்ந்திருப்பது மிக கடினமானது. முதல் பத்து நிமிடத்தில் யாரும் பார்க்காமல் மற்றவரிடம் பேசலாம் என்று பார்கும், ஆனால் அங்கே அவர்கள் கடைபிடிக்கும் ஓழுங்கு உங்களை கட்டுப்படுத்தும், பின்னர் உங்கள் மனதிற்குள் பல என்ன ஓட்டங்கள் ஓட ஆரம்பிக்கும், அங்கிங்கே அலைந்து சிறிது நேரத்திற்கு பிறகு எந்த வித எண்ணங்களூம் இல்லாமல் ஓரு வெறுமை உங்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடும்.நீங்கள் அந்த சாமியாரின் அதி தீவிர பக்தராக இருந்தால், அவர் நாமத்தை ஜபிப்பதையே கடமையாய் கொண்டிருந்தால் நிச்சயம் அவர்ரால் தான் நமது மனத்திற்கு அமைதியேற்பட்டதாக தெரியும். அந்த சமயத்தில் ஓரு விதமான மெல்லிய இசை, மனதை வருடும் மெல்லிய இசை,சாரங்கி, வீணை, வயலின், போன்ற கம்பி வாத்தியங்களினால் வருடப்பட்ட இசை, அதனூடே “குமுக்கு,,,குமுக்கு…” என்று இடிக்காத தபலாவும் சேரும் போது.. அந்த மாளிகையின் முதல் மாடி பால்கனியில் அவர் தெரிந்தார். அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் எல்லோரும் அந்த கணமே தங்கள் கவலைகள் போக்கும் கடவுளின் அவதாரமாய் தெரிய..அவர் பெயர் சொல்லி அழைத்தார்கள்.அதற்குள் அவர் மெல்ல மாடியிலிருந்து இறங்கிவந்து, தரையிரங்கி, அங்கே அருகேயிருந்த பெண்கள் பக்கத்தில் மெல்ல நடந்து வந்து, அங்கேயிருந்த பெண்களில் சிலருக்கு மலர்களும், தங்கசெயினும், குங்குமமும், ஆண்களுக்கு வீபூதியும், மோதரமும் கொடுத்துவிட்டு அங்கிருந்த எல்லோரையும் ஓரு பார்வை பார்த்துவிட்டு, வலது கையை உயர்த்தி, எல்லாரையும் ஆசிர்வதித்துவிட்டு, அந்த் இசை முடிவதற்குள் உள்ளே சென்றுவிட்டார்.எல்லாம் முடிந்து நான் என் மனைவியை அந்த ஆசிரமத்தின் வாசலில்தான் பார்த்தேன். அவள் முகத்தில் ஏதோ ஓரு பிரகாசம் இருந்தது.” என்ன .. எப்படியிருந்தது தரிசனம்? என்றாள். நான் அவளிடம் “என்ன தரிசனம்?’ என்றேன்.. அவளுக்கு என்னைப் பற்றி தெரிந்திருந்தாலும், மனசு கேட்காமல் “உங்களுக்குள்ளா ஏதுமே தோணலயா?” ” அவரை பார்த்தவுடனே நம்ம மனசுல ஓரு சின்ன நம்பிக்க வரல?”அவளை மாதிரியான பக்தர்களுக்காகவே தயாரிக்கப்பட்ட ஓரு தேர்ந்த திரைக்கதை ஆசிரியரின் நேர்த்தியோடு அமைககபட்ட ஓரு திரைக்கதைதான் இந்த தரிசனம் என்று சொன்னால், அவள் மனது புண்படும் என்று தோன்றியதால்.. நான் ஏதும் பேசாமல்.. சிரித்தபடி, தலையாட்டினேன்.

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்

Posted in Uncategorized on நவம்பர் 12, 2006 by cablesankar

மக்களை சுரண்டும் தனியார் வங்கிகள்என்னடாது.. டெய்லி காலைல ஓன்பது மணிக்கு ஆரம்பிச்சு, சாயங்காலம் ஆறு , ஏழு மணீ வரைக்கும் விடாம, விடாது கருப்பு போல விடாம உங்ளுக்கு லோன் வேணுமா? கிரெடிட் கார்ட் வேணுமா? ன்னு கேட்க ஆரம்பிச்சி, சரின்னு சொல்லிட்டா உங்க பெண்டாட்டி கூட இவ்வளவு கேள்வி கேட்டிருக்க மாட்டாங்க? நீங்க எங்க எங்கயெல்லாம் அக்கவுண்ட் வச்சிருக்கிங்க? எவ்வளவு லோன் போவுது? மாசம் உங்க சம்பளம் என்ன? சொத்து ஏதாவது இருக்கா? யார் பேர்ல இருக்கு?ன்னு உங்களுக்கு பொண்ணு கொடுத்த மாமனார் கூட இவ்வளவு கேள்வி கேட்க மாட்டாரு? சரி லோன் கொடுக்கிறாங்க கேட்கத்தான் செய்வாங்கன்னு சரின்னு சொல்லிட்டா? உடனே ஓரு எச்சூட்டிவை அனுப்பி அந்த பேப்பர், இந்த பேப்பர், எல்லாத்தையும் ஜெராக்ஸ் எடுத்து எதையும் பில் பண்ணாத அப்ளிக்கேஷனில் கையெழுத்து வாங்கிட்டு லோன் கொடுக்கிற மவராசனையா இப்படி சொல்லறன்னு யாராவது கேட்டா? மன்னிக்கணும்.. இதுவரைக்கும் எல்லாமே ஓகேதான். ஆனா அதுக்கப்புறம்தான் ஆரம்பிக்கும் அவங்க சுரண்டல்

1முதல் சுரண்டல்லோன் வாங்க அப்ளிக்கேஷனெல்லாம் கொடுத்த பிறகு உங்க செக்குக்காக காத்திருப்பீங்க உங்க லோன் அமொண்ட் 1 லட்சம்ன்னு வச்சீங்கன்னா.. 5000 ரூபாய் ப்ராசஸிங்ன்னு கழிச்சுட்டு 95,000தான் தருவாங்க.. ஆனா இந்த ப்ராசஸிங் பீஸ் பத்தி எதையும்மே முடிஞ்ச வரைக்கும் அந்த் டெலிகாலர் சொல்ல மாட்டாங்க.2 சுரண்டல் இரண்டு

இப்போ நீங்க எடுத்த லோனை முன்கூட்டியே முடிக்கீறீங்க.. அதுக்கு pre-closing chargesனு ஓரு அமொண்ட் அதாவது இப்போ சுமார் 4லிருந்து 5 பர்சண்ட் வரைக்கும் எடுத்துப்பாங்க.. இது என்னடாது கூத்துன்னு பார்த்தா.. அதுக்கப்புறம் தான் ஆரம்பிக்குது.. ஆட்டமே.. முன்கூட்டியே முடிக்கற லோனுக்கு அந்த நாள் வரையான வட்டிய ஓரு பைசாகூட விடாம, ப்ராசஸிங், க்ளோஸிங்னு எல்லா காசையும் வாங்கிட்டு, நம்ம செக்கை திரும்ப கொடுக்கணுமில்ல ஆனா அதுக்கு ஓரு ரூல்ஸ் வச்சுருக்காங்கஅதாவது ஓரு குறிப்பிட்ட நாளுக்கு அப்புறம் க்ளோஸ் ஆகிற அக்கவுண்டின் செக்கெல்லாம் அடுத்த மாசம் நம்ம அக்கவுண்ட்டில கலக்ஷனுக்கு போட்டு நம்ம பாஸ் பண்ண சொல்லிட்டு அதுக்கப்புறம் நாம அந்த வங்கிய அணுகி நம்ம பணததை க்ளைம் பண்ணிக்கணும். அதாவது அவங்க மட்டும் அவங்க பணத்துக்கு ஓரு நாள் கூட விடாம வட்டி போட்டு வாங்கிப்பாங்க, ஆனா நம்ம பணத்த அவங்க பத்து பதினைந்து நாள் வச்சிக்கிட்டு அதுக்கு ஓரு ரூபாய் கூட வட்டி தரமாட்டாங்களாம் என்ன அநியாயம்? சரி இதுக்கு வேற வழி இல்லையான்னு கேட்டா இருக்கு. அது நம்ம பேங்கில நம்ம செக்கிற்க்கு ஸ்டாப் பேமண்ட் கொடுக்கிறது. ஆனா அதுக்கு ஓவ்வொரு பேங்க் குறைந்தபட்சம் 100 ரூபாயிலிருந்து 200 வரைக்கும் வசூலிக்கிறாங்க.. சரி அந்த காசை யாவது அவங்க திரும்ப கொடுக்கணுமில்ல.. கேட்டா அதெல்லாம் நாங்க லோன் வாங்கும் போதே.. அதில ரூல் அண்ட் ரெகுலேஷனில் போட்டிருக்கோம்ன்னு சொல்றாங்க.. சரின்னு அந்த ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷ்னை ப்பார்தா.. அதுல செக்க ஸ்டாப் பேமண்ட் கொடுக்க சொல்லி போட்டிருக்கு.. அனாஅதுக்கான சார்ஜ் க்ளேயிம் பண்ணகூடாதுனு போடல.. இத ஓரு வாட்டி GE கண்டரி வெயிட் என்கிற நிறுவனத்தில் கேட்க போய் அவங்க என்ன தனியா ஓரு ரூமிற்க்கு கொண்டு போய் உன்னால முடிஞ்சத பாத்துக்கன்னு என் கழுத்த பிடிச்சு வெளிய தள்ளி விட்டாங்க.. அதுக்கப்புறம் நான் ஓரு தர்ணா போராட்டம் லெவலிலே நடு ரோட்டில் தனிமனிதனாக பிரச்சனை பண்ணி. போலீஸ் வந்து, அந்த பணதத கொடுத்தாங்க.. அப்போ ஓரு ஆள் என்ன கேட்டாரூ … 100 ரூபா காசுக்கு ஏன்யா இப்படி பண்ணறேன்னு? நான் அவ்னை ஏற இறங்க பார்த்து, அப்ப ஓரு நூறு ரூபா இருந்தா கொடேன்னு கேட்டது அவரு ஸ்டாப் ப்ளக்கில காணாம போனாறு தையெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா.. அந்த பணத்த வாங்கறதுக்கு உங்களுக்கு உரிமையிருக்கு .. ஆனா யாரும் கேட்கற்தில்ல.. தயவு உங்க பணத்தை எக்காரணத்தை கொண்டும் விட்டு வைக்காதீங்க..அடுத்த சுரண்டல்… விரைவில்..

www.shortfilmindia.com

www.classiindia.com

குறும்படங்களை பற்றிய உங்கள் கருத்து

Posted in Uncategorized on நவம்பர் 8, 2006 by cablesankar

வலைப்பதிவாளர்களுக்கு ஒரு வேண்டுகோள். எவவளவோ படங்களை பற்றி படம் பார்த்து விமர்சனம் எழுதும் நீங்கள் , உங்களுக்காக ஓரு வேண்டுகோள்.. தமிழில் வ்ரும் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை  பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்க்க படுகிறது அது சரி குறும்படங்களை எங்கே பார்பது என்கிறீர்களா? கவலை வேண்டாம் இதோ.. www.shortfilmindia.com மில் சென்று பார்த்து உங்கள் விமர்சனங்களை sankara4@shortfilmindia.com க்கு மினஞ்சலோ அல்லது உங்களது ப்ளாகிலோ தெரியப்படுத்ததும்

நன்றி

சங்கர் நாராயண

www.shortfilmindia.com

www.classiindia.com

www.cablesankar.blogspot.com

www.cablesanker.wordpress.com

Posted in Uncategorized on நவம்பர் 8, 2006 by cablesankar

இலவசம்- தேன்கூடு போட்டிக்காக..


இலவசம்- தேன்கூடு போட்டிக்காக..

என்ன எழுதறதுன்னே தெரியல.. அதுவும் இலவசம் பத்தி எழுதறதுன்னா சும்மாவா? ஏன்னா இலவசம்ன்னா பினாயிலை கூட குடிப்பானுங்கன்னு கவுண்டமணி ஓரு படத்துல சொன்னமாதிரி.. அதுக்கு அத்தாச்சியா நம்ம தமிழ்நாட்டுல ஆட்சி அமைச்சிருக்கிறதும் ஓரு இலவச அரசுதான். பாருங்க எங்க பார்த்தாலும் இலவசம்…தான், புக் வாங்கினா புக் விலயவிட இலவசம் விலை அதிகமா இருக்கு. அதனால அந்த புத்தகம் நம்பர் ஓண்னா வந்திருச்சுன்னு அவங்களே ஏதேதோ சர்வேலிருந்து சொல்றாங்க.. ஆனா ஓரு விஷயம் அந்த புக் நம்பர் ஒண் வந்தது இலவசத்தினால்ன்னு அவங்களே இன்னும் சொல்றாங்க.. இல்லேன்னா அவங்க இலவசத்தை நிறுத்திருக்கணுமில்லே.. அது சரி, ஒரு மளிகை கடையில மாசம் ஐநூறு ருபாய்க்கு மளிகை வாங்கினா ஓரு கூப்பன் தர்றான். அது மாதிரி ஓரு 25 கூப்பன் சேர்த்தா.. ஓரு பான் இலவசம்ன்னு சொல்லியிருந்தான்.. அதுக்காக ஒவ்வொரு மாசமும் சரியா ஐநூறுக்கு மளிகை வாங்கறத்துக்குள்ளே நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். இப்படி இலவசம்ங்கிற பேர்ல கிடைச்ச பான்னோட காதுல சரியா ஹேண்டில் நிக்கமாட்டேங்குது பான் தனியா ஹேண்டில் தனியா வருது. இத மாத்தறதுக்கு ஓரு நாலு வாட்டி அலைஞ்சதுதான் மிச்சம். கடைசியா நானே அந்த கடையில ஓரு ஸ்குருடிரைவர் வாங்கி டைட் பண்ணி புதுசா மாத்திட்டேன்னு சொல்லி தப்பிச்சேன்.. ஆனாலும் சுத்த தத்தி முததடவயே சரியா பார்த்து வாங்கியிருந்தா இந்த அலைச்சல் இல்லேல்ல என்று அன்பு கொஞ்சல் வேறு. இவ்வளவுக்கும் அந்த கடையில் நல்ல தரமான மளிகை குறைந்த விலையில் கிடைக்கிறது. இவ்வளவு இருந்த்தும் ஏன் இலவசம் என்று கூறி விற்கிறான் என்று எனக்கு புரியாமல் இருந்தது. அதற்கு பதில் என் மனைவியிடமிருந்து வந்தது. “இந்த பானை மட்டும் மாத்தாம இருந்திருந்தா நான் அவன் கடை பக்கமே திரும்பமாட்டேன்.” என்றாள். கடைபக்கமே திரும்ப மாட்டாளாம்.. மாதாமாதம் கடைக்கு போவது நான் இவள் போகமாட்ட்டாளம்…கடவுளே.. என்ன கூத்துடாது… இப்படி எல்லாமே இலவசத்தை நம்பி இருக்கும் மனநிலை உள்ள நம் போன்றவர்களூக்கு எப்படி இலவசத்தை பற்றி எழுதுவது…அதுவும் உலகத்தில் இலவசம் என்று எதுவுமே கிடையாது. அப்படி இலவசமாக எதாவது கிடைத்தால் மறைமுகமாக நம்மால் எதாவது அவர்களூக்கு கிடைக்கும்…இல்லாவிட்டால் அவர்கள் இலவசமாய கொடுப்பதற்க்கு அவர்கள் என்ன மாமனா..? மச்சானா? அவர்கள் கூட நமக்கு இலவசமாய ஏதாவது கொடுத்தால் அது மச்சானாக இருந்தால் தமது சகோதரிக்காகவும்,மாமனாக இருந்தால் தனது மருமகனுக்காகவும்தான். இலவசமாக எது கிடைத்தாலும் அதன் தரத்தை பற்றி கவலைப்படாமல் கிடைத்தால் போதும் என்று நாம் நினைப்பதாலும், எது கொடுத்தாலும் அதை வாங்கிக்கொண்டு ஓரு இலவசத்தை கொடுத்தால் பொருட்களின் தரமில்லையென்றாலும் வாங்குவார்கள் என்று வியாபாரிகள் நினைக்கிறார்கள். இப்படி இலவசமாய் பினாயில் கிடைத்தாலும் குடிக்கிற மனநிலையில் உள்ளவர்களூக்கு இலவசத்தை பற்றி என்ன எழுதுவதென்றே தெரியவில்லை. யாராவது இலவசமாய் ஐடியா இருந்த்தால் சொல்லுங்களேன்.. இலவசத்தை பற்றி தேன்கூடு போட்டிக்கு அனுப்ப….

சங்கர் நாராயண் ( கேபிள் சங்கர்)

www.shortfilmindia.com

www.classiindia.com

www.cablesankar.blogspot.com

www.cablesankar.wordpress.com

Hello world!

Posted in Uncategorized on நவம்பர் 7, 2006 by cablesankar