ஜூன் 2007 க்கான தொகுப்பு

சிவாஜி.. பார்த்தாச்சா..?

ஜூன் 22, 2007

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகில் உள்ள 25 நாடுகளில் ஓரே சமயத்தில் சங்கரின் ‘சிவாஜி” படம் ரீலீஸ் ஆகியிருக்கிறது. கடந்த 14ஆம் தேதி முதலே.. தமிழ்நாட்டில் எல்லார் வாயிலும் “சிவாஜி டிக்கட் வாங்கிட்டியா?? வாங்க்கிட்டியா? என்ற கேள்வி தான். அப்படி ஓரு சிவாஜி ஜூரம். உலகமே எதிர்பார்க்க வைத்த ஏவிஎம். ரஜினி, சங்கர், ஏ.ஆர். ரகுமான். போன்ற ஜாம்பவான்கள் சேர்ந்திருக்கும் படம், என்வே எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும், எங்கே முதல் நாளே படத்தை பார்க்காவிட்டால் எதிர்படும் நண்பர்களிடம் அவமானப்பட வேண்டுமே என்று.. முதல் நாளே.. எனக்கு தெரிந்த தியேட்டர்களை காண்டேக்ட் செய்து, ஓரு வழியாக, 10 டிக்கெட்டை வாங்கிவிட்டேன்.. அந்த பத்து டிக்கெட்டுக்கு நான் நீ என்று போட்டி வேறு. நான் சிலருக்கு டிக்கெட் கொடுக்க முடியாமல் போக, அதனால் சில நண்பர்கள், விரோதியாக, பாவிக்க, ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் எதிர்பார்பெல்லாம், என்னுடய டிக்கெட்டை அவர்களீடம் கொடுத்தாவது, என் நட்பை நிருபிக்க, பிரயத்தனம் செய்தார்கள்.

இவ்வளவு, பரபரப்புக் கிடையே, ஓரு வழியாக, தியேட்டர் வாசலில் இருந்த நான்கு தியேட்டர் கும்பலை கடந்து, ஓரு வழியாக, நசுங்கி, பீழிந்து, உள்ளே, போனதும், படம் ஆரம்பித்துவிட்டார்கள். படம் ஆரம்பித்ததும், ரஜினியை, சிறையில் காட்டும் காட்சியில், ஓரு பத்து வருட குறைந்த இளைமையில், பார்த்ததும், நிமிர்ந்து உட்கார வைத்தார் ரஜினி, அதற்கு அப்புறம் தான் , படட்த்தில் காமெடி என்ற பெயரில், ஸ்ரேயாவின் வீட்டில் போய் ரஜினி, பழக, ஆரம்பிப்பதும், அவர்கள் தமிழ் கலாசரத்தின்படி, பழக, அனுமதிகாமல், வெளியே, அனுப்ப, எதிர்வீட்டு சாலமன் பாப்பையா.. தன் இரண்டு கரி குண்டு பெண்களை அழைத்து, அவர்களுடம் பழக, அழைக்க, ஓரே,, காமெடி என்ற பெயரில் கூத்து, அது மட்டுமில்லாம. ரஜினியோடு வரும் விவேக் ஓவர்.

அதன் பிறகு, வழக்கமான, கதை, கொஞ்ச நேரத்துக்கு என்ன நடந்தது என்றே என்க்கு தெரியாது. ஏன் என்றால் என்னை மீறி நான் கண்யர்ந்து விட்டேன். அதற்கு அப்புறம் வரும் திருப்பம், ரஜினி, பாப்பர் ஆவது, சுமனை அவர்வீட்டில் ரெய்டு விட்டு எல்லா கருப்பு பணத்தையும் அபேஸ் செய்தவுடன் படம் முடிந்து விட்டது. அதற்கு அப்புறம் நடப்பதெல்லாம். ஓரே காமெடி. அதில் உட்சபட்சமான காமெடி, ரஜினி தனக்குத்தானே மின்சாரத்தை பாய்ச்சி கொள்வதும், சில மணி நேரங் கழித்து அவரை ரகுவரன் பிழைக்க வைப்பது,

அதற்கு அப்புறம் ரஜினி மொட்டை அடித்துவந்து, செய்யும் கூத்தெல்லாம். படு கொடுமை. படத்தில் ஓரே ஆறுதல். ரஜினி, ரஜினி, ரஜினி,

அதெல்லாம் சரி, கருப்பு பணத்தை பற்றி, பல கோடி செலவு செய்து, அந்த படத்தை வெளியிட விநியோகதர்களிடம், தினசரிகளில் மடித்து கொடுக்கப்பட்ட, கருப்பு பணத்தை எந்த சிவாஜி, பிடிங்கிக் கொள்வார்.

ஜம்பது ரூபாய்க்கு மேல் யாரும் டிக்கெட் விற்கக்கூடாது என்ற உத்தரவை, காற்றில் பறக்கவிட்டு, நூறு, இருநூறு, என்று விற்பனை செய்த தியேட்டர்காரர்கள், அவர்கள் கலைக்ட் செய்த கண்க்கில் வராத பணத்தை எந்த சிவாஜி பிடிங்கிக் க்கொள்வார்.

யாமறியேன் பராபரமே….

Advertisements