ஒக்ரோபர் 2008 க்கான தொகுப்பு

Neenga Indha Madhiri Pannadeyilaya..?

ஒக்ரோபர் 31, 2008

மதியம் சுமார் 2 மணியிருக்கும் ரொம்ப அர்ஜெண்டாய் என்னுடய குதிரையை (அதாங்க..நம்ம பைக்தான் அப்படி சொல்றேன்..மனசுக்குள்ள இளவரசன்னு நினைபபு) ஓட்டி சென்று கொண்டிருந்தேன்.. அதற்கு காரணம் என்னுடய இளவரசி சுலோசனா..பெயர்தான் சுலோவே தவிர பார்ட்டி செம பாஸ்டு..சாந்தம் தியேட்டரில் ஓரு முறை ட்புள் சீட்டில் நெருக்கமாய் உட்கார்ந்திருந்த ஓரு சூட்டு தருணத்தில்,அவளை தொட்டா சுடுமோன்னு நினைச்சுக்கிட்டு இருந்த நேரத்தில..படத்தில நைட் எபெக்ட்டுல சீன் வரும் போது கிஸ் அடிச்சவ, டார்கெட் முடிக்காததால் டீம் ஹெட் காய்ச்சும் காய்ச்சலிலிருந்து தப்பிக்கும் முடிவாய் “லேடீஸ் ப்ராப்ளம்”ன்னு அவன் எதுக்கு என்னனு கேட்க முடியாதபடி பீலாவிட்டுவிட்டு, எனக்கு மிஸ்ட் கால் கொடுத்திருந்தாள்.. (எப்ப கால் பண்ணியிருக்காங்கன்னு கேட்கிறீங்களா? அதுசரி அவங்க ரிசார்ஜ் பண்ற காசுக்கு எப்பதான் பேசுவாங்க..?)உடனடியாய் வந்தால் ரொம்ப நாளாய் கேட்ட மாயாஜால், ஈ.ஸி.ஆர் என்றாள்..

தேன் குடிக்கும் நரியின் ஆவலோடு அடுத்த செகண்ட் என்னுடய டார்கெட் முடிக்காவிட்டால் ஆப்பு அடிக்கும் டீம் லீடர், இந்த மாச இன்செண்டீவ் எதுவும் என் கண்ணுக்கு தெரியவில்லை..இருட்டு ஸீனில், திருட்டு முத்தம் என்னை விரட்டியது, இந்த முறை கொஞ்சம் தைரியமாய்.. எதாவது செய்யணும் அவ கேட்கறதுக்கு முன்னாலேயே..என்று நினைத்தபடி கிரீம்ஸ் ரோடுக்குள் நுழைந்தேன்.. அவளுக்கு ஆபீஸ் அங்கே தான் சங்கீதாவில் இருப்பதாய் சொல்லியிருந்தாள். என் கண்முன்னே ரோடு தெரியவில்லை.. சுலோவே தெரிந்தாள்.. உடனே வர சொன்னதன் பலனாய் நான் முக்கால் மணி நேரம் லேட்டாய் போகிறேன்..டைம் முக்கியம் இல்லாட்டா சுலோ கக்கிடும்..அனால் இந்த கதை நான் சுலோவை பார்க சென்றதை பற்றியல்ல.. அதற்கு முன்னால் நடந்த ஓரு விஷயத்தை பற்றித்தான்

படு வேகமாய் குதிரையை விரட்டி கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்து கொண்டிருந்த ஓரு பைக்காரன் (நான் என்னை தவிர மற்றவர்களை இளவரசர்களாய் கருதுவதில்லை).. என்ன நினைத்தானோ தெரியவில்லை சடாரென்று வலது பக்கம் வண்டியை திருப்பினான்.. அதை எதிர்பார்காத நான் வந்த வேகத்தில் என்னுடய குதிரையின் ப்ரேக்கை எழுந்து நின்று போட்டு ஸ்கேட்டிங் பண்ணாத குறையாய் இங்கிலீஷ் பட ஸ்டைலில் தரையெல்லாம் டயர் மார்காய் தேய்த்து கொண்டு அவனுக்கும் எனக்கும் சில பல இன்ச்கள் இடைவெளியில் மிகப் பெரிய ஓரு விபத்து தவிர்க்கபட.. என்னுடய அவசரம், பதட்டம், சுலோ காத்திருக்கும் நினைப்பு, நான் சென்ற வேகம், விபத்தை தவிர்பதற்காக என்னுடய ரிஸ்க் எல்லாம் சேர்த்து பெருங்கோபமாய் வெகுண்டெழுந்து அந்த பைக்காரனை அவனையும், அவன் குடும்பத்தையும் தெரிந்தவர்கள் கூட அப்படி திட்ட மாட்டார்கள், நான் வாய்க்கு வந்தபடி திட்ட.. அவன் எந்தவித பதட்டமும் இல்லாமல்.. நேராய் என்ன பார்த்து

“நீங்க இந்த மாதிரி பண்ணதேயில்லையா சார்?” என்றான்.

Advertisements

ஆறு நாட்கள்….

ஒக்ரோபர் 24, 2008

சரியாக ஆறு நாட்கள் ஆகிவிட்டது.. நான் பதிவு எழுதி..அப்படி நான் பதிவெழுதாததால் பதிவுலகம் ஓன்றும் பாதித்ததாய் தெரியவில்லை.. பாலசந்தர், சுரேஷ், போன்ற பதிவர்கள் பின்னூட்டமிட்டும், ராஜ் தொலைபேசியிலும் விசாரித்தார்.. அவர்களுக்கு என் வந்தனம்..

கடைசியாய் பாபாவின் திருவிளையாடல் பதிவிட்டுவிட்டு என்னுடய இண்டர்நெட் இணைப்பை துண்டிக்க சொல்லிவிட்டேன்.. நான் என்னுடய் வீடு மாறியதால்.. அதற்கு பிறகு மிக பிஸியாய் இருக்க வேண்டிய நேரமாகிவிட்டது.. வீடு மாறியது ஓருபுறம், பேக்கிங் ஓருபுறம், இதற்கு நடுவில் ஓரு திரைப்படத்திற்க்கு திரைக்கதை விவாதம் வேறு ஓத்து கொண்டிருந்தேன்..ஓரு வழியாய் கலந்து கட்டி, ஞங்கே..மங்கே.. என்று குழப்பமாய் என் காரியங்களை செய்துவிட்டேன்..

அவ்வப்போது என் ப்திவுக்கு வந்த பின்னூட்டங்களை மட்டுறுத்தி வேலையை மட்டும் ப்ரவுசிங் செண்டரில் சென்று செய்துவந்தேன்.. ஓரு வழியாய் மூண்று நாட்களுக்கு பிறகு இண்டர்நெட் இணைப்பு புதிய வீட்டுக்கு கொடுக்கபட்டதும்.. எழுதலாம் என்று நினைத்து சிஸ்டத்தை பூட் செய்தபோது.. ஓரு மாதிரியான எண்ணை போடாத கீல் போல ஓரு சத்ததுடன் திரையில் வார்ட்ரோப் போட்டதுபோல் தோரணம் தோரணமாய் ஓரு மஞ்சள் கோடுகள்.. அதற்குள் மேட்ரிக்ஸ் படத்தில் எழுத்துக்கள் வருமே அது போல எழுத்துக்கள் எல்லாம் சல்பேட்டா அடித்ததுபோல் அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஸ்கிராம்பளர் போல வீசியெறியபட்டதுபோல் இருக்க.. “தலைவன் வச்சுட்டாண்டா ஆப்பு.. என்று கம்யூட்டரின் டிராயரை கழட்டி.. (அதாங்க. ஓப்பன் பண்ணி) பார்த்தா.. ஓரு 1ஜிபி ரேம் காலி..

இத்தனை நாளாய் ஆடாமல் அசங்காமல் தூளிலிலும், தூசியில் துடைக்காமல் பத்திரமாய் வைத்திருத்த அவனை, துடைத்து புதுசா வைத்தது தப்பாயிருச்சு.. இதுக்குதான் பெரிசுங்க சொல்லியிருக்காங்க போலிருக்கு, எல்லோரையும் வைக்கிற இடத்தில வைக்கணும்னு..

எல்லாத்தையும் சரி பண்ணி இதோ மீண்டும் ஆறு நாட்களுக்கு பிறகு என்னை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான வாசகர்களுக்காக.. எழுத ஆரம்பிக்க..யோசிச்சி யோசிச்சி பாத்ததுல எதுவுமே கிடைக்காததினாலே.. இந்த மொக்கை பதிவு.. நன்றி, வணக்கம், நம்ஸ்கார், தன்யவாத்..

Sex…Sex…Sex

ஒக்ரோபர் 18, 2008

சைல்ட் செக்ஸ் இன் கம்போடியா1

சைல்ட் செக்ஸ் இன் கம்போடியா..2

இந்த கொடுமையெல்லாம் எங்க போய் சொல்றது… எதாவது செய்யணும் சார்..

சைல்ட் செக்ஸ் இன் இந்தியா..அடுத்த பதிவுகளில்

எ.வ.த.இ.மா..படம்?

ஒக்ரோபர் 17, 2008

கொஞம் பழசுதான் ஆனாலும் மிக நல்ல படம். இதை பற்றி பதியாமல் இருக்க முடியவில்லை.
செரட்டேரியட்டில் வேலைபார்க்கும் ரமேசன் அவரின் கனவுதன் மகனை எப்படியாவது சிவில் சர்வீஸ் பரிட்சையில் தேர்ச்சியாக வேண்டும் என்பது.

ஆயிரம் தான் லட்சம் லட்சமாய் ஐ.டி, மற்றும் மற்ற துறைகளீல் சம்பாதித்தாலும் சிவில் ச்ர்வீஸ் துறையில் கிடைக்கும் மரியாதை தனி என்பது அவரது எண்ணம். துடியான மகன் மனு, குட்டி மணியா ஓரு பெண் குழந்தை, இவர்க்ளுக்கு எல்லாம் மணியாய் இப்படி ஓரு மனைவி அமையாதா என்று ஏங்க வைக்கும் மனைவி.

மனுவிக்கு எல்லாமே அப்பா தான். அவர் தான் ஆதர்சம். மனு தன் சிநேகிதியுடன் பர்த்டேக்கு பிஸ்சா கார்னர் போய்விட்டு லேட்டாய் வர, அதை சொல்லாமல் மறைக்க அவன் பொய் சொல்ல, அதை அறிந்த மோகன்லால் (ரமேசன்) அதை பற்றி பேசாமல் தான் சிறுவயதில் பொய் சொல்லிவிட்டு ப்ரச்சனையில் மாட்டியதாகவும், ஆனால் அவரின் அம்மா அவரை விட்டுக் கொடுக்காமல் பேசியதாகவும். அதனால் இனிமேல் வாழ்கையில் பொய் சொல்ல கூடாது என்று முடிவெடுத்ததை சொல்ல.. அதை கேட்டு மனு கலங்கி போய் அழுது உண்மை சொல்வதும்.. இது வெறும் காட்சியல்ல.. ஓரு தந்தைக்கும் மகனுக்குமான உறவை இதைவிட எப்படி சொல்லவது.

பாரதியார் பாடல்களின் மேல் அளவில்லா காதல் கொண்ட மோகன்லால் “காற்றுவெளீய்டை கண்ணம்மா” பாடலை பாடுவது அமோகம். ஞாபகசக்தியை பற்றி தன் மகனின் ஸ்கூலில் ஓரு லெக்சர் அடிப்பதாகட்டும், உங்களுடய மனைவியைவிட அழகான பெண்க்ளை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டு யாரும் பதில் சொல்லாமல் இருக்க, உங்களூக்கு எல்லோருக்கும் இங்கிருக்கும் யாரோ ஓருவர் உங்கள் மனைவியை விட அழகானவர் யார் என்று தெரியும்,ஆனால் சொல்ல விருப்பமில்லை..ஏனென்றால் அப்படி சொன்னால் உங்கள் மனைவி மனது புண்படும் என்பதால். ஆனால் ஆதே பெற்றோகளாக இருக்கும் போது உங்கள் மகனிடம் அவன் எப்படி படிக்கிறான் இவ்ன் எப்படி படிக்கிறான் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்க.. பெற்றோர்களுக்கு ஓரு பாடம். இப்படி எல்லாவிதத்திலும் சிறந்த கணவனாய், தகப்பனாய், புத்திசாலியாய், மிகுந்த ஞாபக சக்தி வாய்ந்தவனாய் இருக்கும் மோகன்லாலுக்கு அல்சைமர் என்ற நோய் வந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஞாபகங்கள் மறைய ஆரம்பிக்க.. கண்களிலில் க்ண்ணீர் மழையை உங்களால் கட்டுபடுத்த முடியாது.

அவரின் தந்தையாக நெடுமுடி வேணு, மனுசன் சும்மா பின்னியிருக்கார். ஓரு முறை ஊருக்கு வரும் மோகன்லால் உயரமான வீட்டுக்கு படிக்க்ட்டு ஏறுவதற்கு சுலபமாய் மண அடித்து ரோடு போட்டு மேடு பண்ணி உன் முட்டிக்கு ரெஸ்ட் கொடுக்கணும்ன்னு சொல்ல, அதே வீட்டிற்கு முழு குழந்தையாய் மோகன்லாலை வேலை முடிந்து மேடு செய்த வீட்டின் வாசலில் வண்டி நிற்க, காரை விட்டு இறங்காத வேணு எந்த வித ப்ளாஷ்கட்டும் இல்லாமல் தன் கண்களில கண்ணீர் சேர்ந்து நிற்க. பார்க்கும் பார்வையிலேயே ஆயிரம் காட்சிகள் ஓடும்.

மோகன்லாலின் நண்பனாக ஜெகதி.. மனுசனுக்கு, காமெடியும் வரும், குணசித்திரமும் வரும்..மோகன்லாலின் சின்ன வயது நட்பான சீதா.. மனைவி மீரா வாசுதேவன்.. என்று யாரையும் சும்மா சொல்லிவிடமுடியாது..

எல்லோரையும் விட பாராட்ட வார்தைகளே கிடைக்காத ஓருவர் இயக்குனர் ப்ளசி..நிஜமாகவே அவரிடம் நேரில் பேச வாய்ப்பு கிடைத்தபோது என்னால் பேச முடியவில்லை. எவ்வளவோ ஜாம்பவான்களூடன் நான் பேசியிருக்கிறேன். என்னவோ தெரியவில்லை. என்னால் முடியவில்லை.

சினிமா பார்த்து நான் அழுவது என்பது பல நேரங்களில் எனக்கு சிரிப்பாய் இருந்திருக்கிறது…அங்கும், இங்கும் சில நேரங்களில் நெகிழ்ந்திருக்கிறேன்.. ஆனால் படம் முழுவதும் நெகிழ்ந்தும், உருகியும், பொல..பொலவென்று அழுதும் படம் பார்த்ததில்லை..

படத்தில் வரும் பலகாட்சிகளை பற்றி உங்களிடம் பகிந்து கொள்ள முயன்று எழுத ஆரம்பித்தேன்.. ஆனால் என்னால் முடியவில்லை.. படத்தின் காட்சிகளை நினைக்கும்போது என்னால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை..

ம்…ஹூம்..எ.வ.த.இ.மா.படம்?

அலிபாபா – விமர்சனம்

ஒக்ரோபர் 16, 2008


தமிழ் சினிமாவில் இந்த மாதம் திரில்லர் மாதம் போலிருக்கிறது. மற்றுமொரு திரில்லர் அலிபாபா. திருட்டையே வாழ்க்கையாய் வைத்திருக்கும் கதாநாயகன் கிருஷ்ணா, திருடுவதை நியாயப்படுத்தும் அவரது அப்பா பிரகாஷ்ராஜ்.

ஓரு பெண்ணின் மேல் விருப்பபட்டு தன் திருட்டு தொழிலை விட நினைக்கும் போது, கிருஷ்ணாவின் அக்கவுண்ட்டில் லட்ச கணக்கில் பணம் விழ, அவர் அதை எடுத்து செலவு செய்ய ஆரம்பிக்கிறார். ஓரு கட்டத்தில் அவர் மீது கமிஷனர் கொலை பழி விழுகிறது. அந்த பிரச்சனையில் அவரது அப்பா இறந்து போகிறார். இதையெல்லாம் எப்படி வீழ்த்தி வெளிவருகிறார் என்பது தான் மீது கதை.

ஆரம்பம் முதலே கிருஷ்ணாவை ஆக்ஷ்ன் ஹீரோவாக காண்பிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினிலால் அவரை திருடனாகவும், புத்திசாலியாகவும் காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இயக்குனர் இருப்பதால் அந்த கேரக்ட்ர் பிரச்சனையில் மாட்டும் போது அவர் மீது பரிதாபத்துக்கு பதிலாக ஓரு வெற்று உணர்வே தோண்றுகிறது.

கிருஷ்ணா ,ஹீரோயின் ஜனனியின் பைக்கை திருட, அதே பைக்கை தண்ணியடிப்பதற்காக, ஓரு வீட்டின் வாசலில் வைத்துவிட்டு போவதும், அந்த வீடு ஜனனியின் வீடாய் இருப்பது, அவரது வீட்டிலேயே திருடப்ப் போய் மாட்டிக் கொள்வதும் சுவை.

அதே போல் பிரகாஷ் ராஜ் மூண்று பேரில் ஓருவனை தேர்ட் மேனாக வைத்து கொண்டு எப்படி ஓரு பிக்பாக்ட்டை அடிப்பது என்பதை விளக்கும் நேர்த்தியிருக்கிறதே சிம்ப்ளி சூப்பர்ப்.
அதே தேர்ட் மேன் நிலைமையில் தன் மகன் இருப்பதை உணர்ந்ததும், அவரை காப்பாற்ற் அவர் கமிஷனர் வீட்டில் திருடுவதும், அதில் மாட்டிக் கொண்டு தப்பிக்கும் போது இறந்து போக, கிருஷ்ணாவுக்கு தன் தந்தையை கொலை செய்தவனை பழிவாங்கும் கடமையும் வர, வீறு கொண்டு எழுகிறார்.

கிருஷ்ணாவுக்கு ஓரளவுக்கு ஆட வருகிறது. மற்றபடி நடிக்க இனிமேல் தான் முயற்சி செய்ய வேண்டும்.ஜனனிக்கு ஓன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

ஆரம்பம் முதல் கமிஷன்ர் மீதும், அவர் இறந்த்தும் டி.சிமீதும், என்று காயை நகர்த்தும் இயக்குனரின் திரைக்கதை பாராட்டவேண்டியது.

வர வர வித்யாசகர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. இந்த படத்திலும் அவரை காணோம்.

கணேஷ்குமாரின் ஓளிப்பதிவு மிகவும் சுமார் ரகம். சத்தம் போடாதே ஓளிப்பதிவு செய்தவரா இவர்?

கிருஷ்ணா டிசியின் குடும்பத்தை கடத்தியிருப்பதாக கூறி அவரை அங்கே இங்கே அலையவைப்பதும், டிசி அதற்காக ஓடியே அந்த அந்த இடங்களை அடைவதும், ஓரே தமாஷ், ஓரு ஆட்டோ தட்டி நிறுத்தினால் போக முடியாதா?

மொத்ததில் ஓரு half baked thriller

யானை கொம்பனும்.. ஏதோ ஓரு ….யபாரதியும்..

ஒக்ரோபர் 15, 2008


எனக்கென்னவோ அவ்வளவு ஆர்வம் இல்லாதது மாதிரி காட்டிக்கொண்டேன்.. யாராவது பார்த்துவிட்டால்.. “யாரும் பாக்கமாட்டாங்கடா..” என்றான் சேகர்.. எங்கள் குருப்புக்கு வஸ்தாது..பார்த்தால் சோனியாய் இருப்பான், ஆனால் செய்கிற வேலையெல்லாம் சோனி டிவிமாதிரி பெரிசாத்தான் இருக்கும்.

நான், சேகர், சண்முகம் ஆகிய மூவரும் ரொம்ப நெருக்கம்.. நானும்,சண்முகமும் ஓரே ஏரியா…ஆனால் சேகர் தண்டையார்பேட்டை..அவனிடம் ஓரு வசீகரம் இருந்த்து.. கதை அவனை பற்றியல்ல.. நாங்கள் மூவரும் முதல் முதலாய் பிட்டு படம் பார்க்க போக ப்ளான் செய்த்தை பற்றி தான் .

எனக்குன்னு என்னுடய் செட்டில் சுமாராய் படிப்பவன் என்ற இமேஜ் இருந்ததால், நான் இந்த மாதிரி படத்துக்கெல்லாம் தெரிந்தால், “வதனி” என்ன நினைப்பாள் என்றெல்லாம் தோண்றியது. அதையெல்லாம் சேகரிடம் சொல்லவில்லை..தீவரமாய் ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட் கணக்காய் சுற்று வட்டாரத்தில் எங்கெல்லாம் அந்த மாதிரி தியேட்டர் இருக்கிறது என்ற லிஸ்டை தயார் செய்தோம்.. என் காலேஜிலிருந்து பக்கத்தில் இருந்த்து அனகாபுத்தூர் அங்கே ஓரூ தியேட்டர், அலந்தூர், என்று பக்கத்தில் உள்ள தியேட்டரை எல்லாம் லிஸ்ட் எடுத்து.. ராமகிருஷ்ணா போகலாம் என்று ப்ளான் செய்தோம்..

பஸ்ஸில் போகும் போது ராமகிருஷ்ணாவின் போஸ்டரில் ஏதோ காமுகன் என்ற டைட்டிலில் உள்ளே இருப்பதையெல்லாம் பிதுக்கியபடி போஸ்டரில் இருந்த அந்த நடிகையை பார்த்து, மனசுக்குள் ஓரு கிளூகிளூப்பு ஏற்பட்டது.. நாங்கள் மூவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டோம்.. பஸ்ஸில் கொஞ்சம் புஷ்டியாய் இருந்த அம்மணிகளை பார்த்தால் போஸ்டர் நினைவுக்கு வந்தது.

ஓரு வழியாய் தியேட்டர் வாசலில் போய் நின்றால் வாசலில் ஓரு போர்ட் வைத்திருந்தார்கள் ஏதோ ஜெனரேட்டரோ.. புரஜெக்டரோ ப்ராப்ளம் என்பதால் ஷோ கேன்சல் செய்திருப்பதாக.. மூண்று பேருக்கும் “சேது சமுத்திர திட்டம்” கெட்டு போனதை போல ரொம்ப வருத்தமா இருந்திச்சு.. பக்கத்தில் வேறு ஏதாவது தியேட்டர் இருக்குமா ? என்று மனசில் நினைக்க, சேகர் மச்சான் கிளம்பினது கிளம்பிட்டோம் .. படம் பாக்காம போகறதில்ல.. வாடா எங்க ஏரியாவுல ஓரு திருவெற்றியூர்ல ஓரு தியேட்டர் இருக்கு. நம்ம ஏரியாவாச்சேன்னு போவாணாம்ன்னு பாத்தேன்.. கிளம்பு” என்று ஒரு படை தளபதி போல முடிவெடுத்து திருவொற்றியூருக்கு பஸ் பிடித்து கிளம்பினோம்..

ஓரு பிட்டு படம் பார்பதற்காக இவ்வளவு அலைச்சலா என்றெல்லாம் தோண்றவில்லை.. எடுத்த குறிக்கோளில் உறுதியாய் எங்கள் வீர பயணம் செய்து தியேட்டர் அருகில் இறங்கினோம்.. தியேட்டர் வாசலில் ராஜேந்தர் நின்று கொண்டிருந்தார். நான் சேகரை சந்தேகத்துடன் பார்க்க,, ம்ச்சான் தியேட்டர் இது இல்லடா கொஞ்சம் உள்ள போணும். அந்த தெரு ஓரு அகலமான நீண்ட தெரு.. நடுவில் ஏதோ ஓரு அம்மன் கோயில் இருந்த்து.. அந்த கோயிலை சுற்றி “ப” வடிவில் தெரு இருக்க, சுற்றிலும் வீடுகள், கோயிலின் நேர் பின்புறம் தியேட்டர்..(சாமி பட தியேட்டர் கோயிலுக்கு பின்னாலே..) தியேட்டர் வாசலில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஓரே பெருசுகள் சிகரெட் பிடித்து கொண்டிருந்தார்கள். “யானை கொம்பன்” ப்ரேம் நசீர் நடித்த படம்.. 6ரூபாய் பால்கனி டிக்கெட். சிறிது நேரத்தில் சுற்றி பார்த்தால் ஓரளவுக்கு கூட்டம் வந்திருந்த்து.

படம் ஆரம்பித்தவுடன் ப்ரேம்நசிர் ஓரு கிராமத்தில் யானை வளர்த்து வருகிறார்.ஜயப்ப பக்தர்.படத்தில் முண்டு கட்டிக் கொண்டு வரும் ஏதோ ஓரு பாரதியை பார்த்து.. “இதுதான் பிட்டா சேகரு” என்றேன். சேகர் எற்கனவே பார்தவன் போல சேச்சே அதெல்லாம் தனியா காட்டுவாங்க..என்றான்.

சிறிது நேரத்தில் ரசிக கண்மணிகள் ப்ரேம்நசிர் சாமி கும்பிடும் காட்சியில் கைதட்டி விசிலடிக்க ஆரம்பித்தார்கள்.. படம் கட் ஆகி ஓரு அட்டு பிகர் திருமலைநாயக்கர் தூணுக்கு கோவணம் கட்டிய மாதிரி மெலிதான வெள்ளை துணியில் குளிக்க ஆரம்பித்தாள்.. தியேட்டர் முழுவதும் மயான அமைதி.. சூடும் ஏறியது போல் இருந்த்து.. ஆனால் என் உடம்புக்குள் ஏற்பட்ட சூடு என்பது பிற்பாடு தெரிந்த்து. அவள் கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் ஊற்றி, குளிக்க.. எங்களுக்கு வேர்த்து.. கையை..சாரி பையை வைத்து அழுத்தியபடி பார்க ஓரு வழியாய் தன்னுடய மேலாடையை (அப்படின்னு ஓண்ணு இருந்த்தா?)
கழட்டிவிட, அவ்வளவு பெரிய.. பார்த்து விதிர்த்து போய் என்னன்னு புரிவதற்குள் முடிந்து இண்டர்வெல் விட்டார்கள்..

நாங்கள் மூவரும் தேண் குடித்த நரி போல் ஓருத்தரை ஓருத்தர் பாத்து கொண்டோம்.. “மச்சான் வெளிய போவாணாம். எங்க ஏரியா தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா? பிரச்சனை..என்றான் சேகர்..உடனடியாய் பாத்ரூம் போக வேண்டிய நிர்பந்தம் இருந்தாலும், நண்பனின் பாதுகாப்பு கருதி அடக்கி கொண்டேன்.


இண்டர்வெல் முடிந்து ஓரு பத்து நிமிடம் திரும்பவும் ப்ரேம் நசிர் முதல் சீனிலிருந்து போட்டார்கள்.இம்முறை ரசிக கண்மணிகள் கைதட்டல்,விசிலில்,, நாங்களும் ஐக்கியமானோம்..ஓரு முறை தட்டினோம் , இரண்டாவது தடவை தட்டினோம்.. மூண்றாவது முறை தட்டிய போது எங்கள் கைத்ட்டல், விசில் மட்டுமே கேட்டது.சுற்றி பார்தால் யாருமே இல்லை.. சம்மந்தமேயில்லாமல் டக்கென்று படத்தை நிறுத்தி முடித்துவிட்டார்கள்.. சேகர் முதலில் வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்து தியேடரிலிருந்து வெளியே வர.. எங்களுக்கு எந்த பயமும் இல்லாததால் அசால்டாகவே வந்தோம்.

பஸ்ஸ்டாண்டு அருகில் வந்த்தும் திரும்பவும் காலேஜூக்கு போகலாம்னு பஸ்ஸுக்கு காத்துகிட்டு இருந்த போது.. சண்முகத்தின் தலை மேல பட்டென்று அடிவிழுந்த்து.. திரும்பி பார்த்தால் அவன் சித்தப்பா.. நாங்கள் எல்லாம் ஸ்டாப் ப்ளாக்கில் எஸ்கேப்பாக.. அடுத்த நாள் காலையில் சண்முகத்தை ரயில்வே ஸ்டேசனில் பார்த்தபோது என்னடா ஆச்சு..ன்னு கேட்டேன்..

நான் படம் பாத்ததை வீட்ல சொன்னீங்கன்னா.. நீங்க படம் பாத்த மேட்டரை நானும் சொல்வேன்ன்னு சொன்னேன்… அவரு போயிட்டாரு..

அவரும் படம் பார்த்தாரா மச்சான்?

யாருக்கு தெரியும் என்றான் சண்முகம்..

மீனாட்சி…சாமான் நிக்காலோ….

ஒக்ரோபர் 14, 2008

சாந்தி மீனாட்சியை நான் மீண்டும் பார்பேன் என்று நினைக்கவில்லை..அவள்தானா?..அவள்தானா? யெஸ்.. அவளேதான்.. எப்படி மறக்க முடியும் அவளை… அவளால் அடிவாங்கியதை எப்படி மறைக்க முடியும்? எதற்கு அடி வாங்கினேன்.. என்று தெரியாமல் நான் அலைந்ததை எப்படி மறைக்க முடியும்?

நானும் ஆனந்த ராஜூம ரொம்ப நெருங்கிய நண்பர்கள் ஓவ்வொரு திங்கட்கிழமையும்.. ஆம் ஓவ்வொரு திங்கட்கிழமையும்தான்.. ஏன்னா அன்னைக்குத்தான் அவன் குடும்பத்தோடு எல்லா ஞாயித்துகிழமையும் படம் பார்த்துட்டு, அடுத்த நாள் வந்து கதை சொல்வான்..அதனால் நானும் அவனும் திங்கட்கிழமை மட்டும் ரொம்ப க்ளோஸ் ப்ரண்ட்..

அவன் கதை சொல்லும் போதே ஓரு முழு படத்தை பார்த்தா மாதிரி இருக்கும்.. காலையில முதல் ப்ரீயட் போதே ஏதாவது சாக்கு சொல்லி நானும் அவனும் கடைசி ரோவில் போய் உட்கார்திருவோம்.. அப்புறம் எங்க வேலையை ஆரம்பிச்சுடுவோம்..சத்தமே இல்லாம..(அதெப்படி சத்தமே இல்லாமன்னு..) தியேட்டர்ல போட்ட அட்வர்டைசிங் முதக் கொண்டு ஓண்ணு விடாம மியூசிக்கோட சொல்லுவான்.. அப்படி அவன் அந்த வாரம் சொன்ன படம் சூப்பர் படம் ..அந்த படத்தோட பாட்டுவேற சும்மா சூப்பர் டூப்பர் ஹிட்.. தமிழ்நாடே பத்திக்கிட்டு எறிஞ்சுது..

அவன் சொல்ல, சொல்ல, எப்படியாவது அந்த படத்த பாக்கணும்னு முடிவெடுத்துட்டேன்..அவன் கதைசொன்ன இம்பாக்டுல அன்னைக்கு பூரா எனக்குள்ள அந்த பாட்டுதான்.

க்ளாஸ் முடிஞ்சி வெளியே போகும்போதும் அதே பாட்டுதான், அந்த பாட்டு என்னையும், என் திங்கட்கிழமை நண்பனுக்கும் ரொம்ப பிடிச்சதினாலே.. தெருவெல்லாம் “ஷோலே” பட “ஏ..தோஸுதி’” வருமே அது போல தோளில் மேல் இருவரும் கைபோட்டுக் கொண்டு, பாடிக் கொண்டே போனோம்..அதை , அந்த நிமிஷத்தை எப்படி சொல்றதுன்னே தெரியல..சும்மா மனசெல்லாம் பூ கணக்கா இருந்திச்சு..

அடுத்த நாள் காலையில க்ளாஸூக்கு போனவுடனே..வழக்கபடி நாங்க ரெண்டுபேரும் அவங்க, அவங்க சீட்ல போய் உட்காந்திக்கிட்டோம்.. க்ளாஸ் எடுக்க வந்த அமுதவல்லி மேடம்.. எதையும் பத்தியும் பேசாம..எடுத்த்வுடனேயே என்னையும் என் திங்ககிழமை நண்பன் ஆனந்த ராஜையும் கூப்பிட..என்ன ஏதுன்னு புரியாம.. இரண்டு பேரும் எழுந்து நின்னோம்..

“இங்க வாங்கடா” மேடம் கூப்ப்டாங்க..

எதுக்கா இருக்கும்ன்னு யோசிச்சிக்கிட்டே.. மெல்ல அவங்க பக்கத்தில போக,, மேடமுக்கு என்ன ஆச்சோ தெரியல.. எங்க தெருமுனையில குறி சொல்ற முனியம்மா மாதிரி ரியாக்‌ஷன் கொடுத்திகிட்டு அங்கே இருந்த ஓரு கழிய எடுத்து சும்மா.. கையிலயும், முதுகிலெயும்.. ரெண்டு பேரையும் பின்னி எடுத்துட்டாங்க.. ஓவ்வொரு முறை அடிக்கும் போதும்..

“முளைச்சு மூணு இலைவிடல அதுக்குள்ள..அதுக்குள்ள..”ன்னு சொல்லிகிட்டே அடிச்சாங்க..

எங்களுக்கு என்னனு புரியவே இல்ல.. நான் மட்டும் வீரனா “எங்கள எதுக்கா மேடம் அடிக்கீறீங்கன்னு கேட்டதுக்கு எக்ஸ்ட்ராவா ரெண்டு எனக்கு கிடைச்சுது.. இதையேல்லாம் பார்த்த என் க்ளாஸ் மேட்க்ளுக்கு ரொம்ப வருத்தமாயி..என் க்ளோஸ் கேர்ள் ப்ரண்ட்..ஆண்டாள் என்னிடம் மட்டும் தனியாக வந்து “எல்லாத்துக்கு காரணம் அவதான்னு “சொன்னா.. அவதான் மேடத்துக்கிட்ட என்னவோ காலையிலேயே சொன்னான்னு சொன்னதும் நான் மீனாட்சிய பார்த்தேன்..அவ என்னவோ தனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமில்லங்கற கணக்கா.. என்னைப் பார்த்ததும் மூஞ்சிய திரும்பிக்கிட்டா..

என்ன சொன்னேன்னு அப்ப கேட்கிற தைரியம் அப்ப எனக்கு இல்ல.. ஆனா இப்ப இவ்வளவு வருஷத்துக்கு அப்புறம் மீனாட்சிய பார்த்ததும் கேட்கணும்னு தோணிச்சு.. கொஞ்ச நேரம் சகஜமா பேசினதுக்கு அப்புறம் மீனாட்சியிடம் “ஆமா.. அப்ப எதுக்காக மேடத்துக்கிட்ட அடிவாங்க வச்சே..?”

மீனாட்சி ஆச்சர்யத்துடன் சிரித்தபடியே.. “அத இன்னும் ஞாபகம் வச்சிருக்கியா..?”கேட்டா.. எப்படி மறக்க முடியும்ன்னு நினைச்சுகிட்டே.. அவளை பார்க்க..

“அது ஓண்ணுமில்ல அன்னைக்கு நீயும் ஆனந்த ராஜூம்.. என் பின்னாடி வந்துகிட்டே.. என்னை பத்தி பாட்டு பாடி கிண்டல் பண்ணீங்களா..அதத்தாஅன் மேடத்துக்கிட்ட சொன்னேன்.. அதுக்குதான் அடிச்சாங்க…ன்னு சொல்லிட்டு சிரிச்சிகிட்டே போயிட்டா..

”என்ன கொடுமை சார் இது? நாலாம் க்ளாஸ் படிக்கும் போது, “என்னடி மீனாட்சீ.. ன்னு எங்களுக்கு முன்னால் போன சாந்தி மீனாட்சிய பார்த்துகிண்டல் பண்ணி பாடற வயசா சார் அது.. ?? ஆனந்தராஜூ எங்கடா இருக்கே..???