Archive for the ‘சினிமா’ category

Onibus174- பஸ்ஸை கடத்திய இளைஞன்

நவம்பர் 11, 2008

b1

ரியோ டி ஜெனிரோவில் ஜூன் மாதம் 12ஆம் தேதி 2000த்தில், முழுவதும் பயணிகளால் நிரம்பியிருந்த பஸ்நெ174ஐ, பட்ட பகலில் ஆயுதம் ஏந்திய சாண்ட்ரோ டோ நாஸிமெண்டோ என்கிற ஓருவனால் கடத்தப்பட்டுகிறது..

பஸ்ஸை ஓரு இடத்தில் நிறுத்தி அதிலிருந்து எவராவது வெளியேற முற்பட்டால், அவர்களையும், போலீஸ் ஏதாவது செய்ய முயன்றால் பஸ்ஸில் உள்ள எல்லா பயணிகளையும் கொன்று விடுவதாய் மிரட்டுகிறான்..

இவை அனைத்தும் இதை அங்குள்ள பிரேசிலியன் தொலைக்காட்சி நேரலை நிகழ்சியாக தன்னுடய சேனலில் ஓளிபரப்புகிறது.. அந்த கடத்தல்காரனிடம் மாட்டிய பயணிகளின் நிலைமை, பயணிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியில் போலீஸ் நடத்தும் போராட்டம் என்று எல்லா விஷயங்க்ளும் நேரலையாய் தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி கொண்டிருப்பதால் ஏற்படும் பதட்டம்.. என்று போகிற இந்த படம் அதை மட்டும் காட்டவில்லை..

பஸ்ஸை கடத்திய சில நிமிடங்களில் அவன் யாரென்று கண்டுபிடிக்க முயற்சித்து அதை கண்டுபிடித்து, அவன் ஏன் இப்படி ஆனான்? அவனுடய குடும்ப பிண்ணனி, என்று அவனின் வேறு முகத்தையும் தேடி, தேடி காட்டுகிறது.. ஏழ்மையும், படிப்பில்லாததால் சம்பாதிக்கும் திறன் இல்லாத அவன் மிக சாதாரணமான ஓருவனாய் தான் வாழ்ந்து வந்திருக்கிறான்.. அவனை எது இந்த மாதிரியான ஓரு கடத்தலுக்கு தள்ளியது என்று அவனை பற்றிய இன்வெஸ்டிகேடிவ் முறையில் காட்டபட்டு, இடையில் இங்கே நடக்கும் நேரலை நிகழ்வையும், மாற்றி மாற்றி காட்டி நம்மை நெகிழ வைக்கிறார் இயக்குனர்..ஜோஸ் பதில்லா..

அவனினி தந்தை அவன் தாய் கருவுற்றிருக்கும் போதே அவளிடமிருந்து பிரிந்துவிட..அவனை வளர்க்க மிகவும் கஷ்டப்படும் அவனின் தாய், அவன் ஆறு வயதிருக்கும் போது அவன் கண்முன்னே தாய் கொல்லபடுவதை பார்க்கிறான்.. அதன் பிறகு அவனை வளர்க்கும் பாட்டி, பின் வேலையில்லமை, வீடில்லாமல் திரியும் பல பிரேசிலிய இளைஞர்களின் போதை பழக்கங்கள் போன்றவற்றை தீவிரமாய் விவரிக்கிறது இந்த ஆவண படம்..

போலிஸ் அவனிடமிருந்து பயணிகளை காப்பாற்ற அவனை சுட முற்பட, அவனோ தான் சரணடய ஓத்து கொள்ளும் நேரத்தில் அவ்வளவு நேர நிகழ்வின் அயர்ச்சியில் போலீஸ் சுட, அதில் அவனுக்கு பதிலாய் வேறு ஓரு பயணி இறக்கிறார்.

கடைசியில் சரணடைந்த அவனை போலீஸார் கைது செய்து அழைத்து போகிறார். இதில் நடந்த ஓரு விஷயம் என்னவென்றால் அவன் சரண்டைந்த பிறகு அவனை அழைத்து போகையில் அவன் இற்ந்து விட்டான்.. போலீசார் அவனை அடைத்து அழைத்து சென்ற வண்டியில் அவன் மூச்சு அடைத்து இற்ந்துவிடுகிறான்..என்று சொல்லபட்டாலும், போலீசாரால் அவன் கொல்லப்பட்டான் என்றும் பரவலாய் பேசப்படுவதாய் காட்டபடுகிறது..

படத்தில் வரும் பஸ் கடத்த்ல காட்சிகள் அனைத்தும் பிரேசிலியன் டிவியில் காட்ட்பட்ட ஓரிஜினல் புட்டேஜையே எடுத்தாண்டு இருக்கிறார்கள்.. அவனை பற்றிய தேடலும், அவனை பற்றி அவனுடய் பாட்டி போன்ற்வர்களின் பேட்டியும், உங்கள் மனதை உருக்கும்.. எந்த சமுதாயம் அவனை இப்படி துறத்தியது என்கிற போது நம் மனது கனக்கத்தான் செய்யும்..

இந்த படம் பெருபாலும் பிரேசிலை தவிர பல நாட்டு படவிழாக்களில் பரிசுகளை வென்றிருக்கிறது…

டிஸ்கி..
சமீபத்தில் பம்பாயில் ஓரு பிகாரி இளைஞன் பஸ்ஸை கடத்த முயற்சித்து அதில் அவனை போலீஸார் கொன்றதும், அதை பற்றிய லைவ் கவரேஜூம்.. அதை பார்த்தும்.. எனக்கு இந்த படம் தான் ஞாபகம் வந்தது..எது அந்த பிகாரி இளைஞனை இப்படி துரத்தியது.. நம் அரசியல்வாதிகளின் அட்டூழியத்தினால் தானே…அரசியல்வாதிகளே யோசியுங்கள்.. உங்களின் சுய அரசியல் லாபத்துக்காக மக்களை தூண்டிவிட்டு அதில் குளிர் காயாதீர்கள்..


Advertisements

எ.வ.த.இ.மா..படம்?

ஒக்ரோபர் 17, 2008

கொஞம் பழசுதான் ஆனாலும் மிக நல்ல படம். இதை பற்றி பதியாமல் இருக்க முடியவில்லை.
செரட்டேரியட்டில் வேலைபார்க்கும் ரமேசன் அவரின் கனவுதன் மகனை எப்படியாவது சிவில் சர்வீஸ் பரிட்சையில் தேர்ச்சியாக வேண்டும் என்பது.

ஆயிரம் தான் லட்சம் லட்சமாய் ஐ.டி, மற்றும் மற்ற துறைகளீல் சம்பாதித்தாலும் சிவில் ச்ர்வீஸ் துறையில் கிடைக்கும் மரியாதை தனி என்பது அவரது எண்ணம். துடியான மகன் மனு, குட்டி மணியா ஓரு பெண் குழந்தை, இவர்க்ளுக்கு எல்லாம் மணியாய் இப்படி ஓரு மனைவி அமையாதா என்று ஏங்க வைக்கும் மனைவி.

மனுவிக்கு எல்லாமே அப்பா தான். அவர் தான் ஆதர்சம். மனு தன் சிநேகிதியுடன் பர்த்டேக்கு பிஸ்சா கார்னர் போய்விட்டு லேட்டாய் வர, அதை சொல்லாமல் மறைக்க அவன் பொய் சொல்ல, அதை அறிந்த மோகன்லால் (ரமேசன்) அதை பற்றி பேசாமல் தான் சிறுவயதில் பொய் சொல்லிவிட்டு ப்ரச்சனையில் மாட்டியதாகவும், ஆனால் அவரின் அம்மா அவரை விட்டுக் கொடுக்காமல் பேசியதாகவும். அதனால் இனிமேல் வாழ்கையில் பொய் சொல்ல கூடாது என்று முடிவெடுத்ததை சொல்ல.. அதை கேட்டு மனு கலங்கி போய் அழுது உண்மை சொல்வதும்.. இது வெறும் காட்சியல்ல.. ஓரு தந்தைக்கும் மகனுக்குமான உறவை இதைவிட எப்படி சொல்லவது.

பாரதியார் பாடல்களின் மேல் அளவில்லா காதல் கொண்ட மோகன்லால் “காற்றுவெளீய்டை கண்ணம்மா” பாடலை பாடுவது அமோகம். ஞாபகசக்தியை பற்றி தன் மகனின் ஸ்கூலில் ஓரு லெக்சர் அடிப்பதாகட்டும், உங்களுடய மனைவியைவிட அழகான பெண்க்ளை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டு யாரும் பதில் சொல்லாமல் இருக்க, உங்களூக்கு எல்லோருக்கும் இங்கிருக்கும் யாரோ ஓருவர் உங்கள் மனைவியை விட அழகானவர் யார் என்று தெரியும்,ஆனால் சொல்ல விருப்பமில்லை..ஏனென்றால் அப்படி சொன்னால் உங்கள் மனைவி மனது புண்படும் என்பதால். ஆனால் ஆதே பெற்றோகளாக இருக்கும் போது உங்கள் மகனிடம் அவன் எப்படி படிக்கிறான் இவ்ன் எப்படி படிக்கிறான் என்று கேட்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்க.. பெற்றோர்களுக்கு ஓரு பாடம். இப்படி எல்லாவிதத்திலும் சிறந்த கணவனாய், தகப்பனாய், புத்திசாலியாய், மிகுந்த ஞாபக சக்தி வாய்ந்தவனாய் இருக்கும் மோகன்லாலுக்கு அல்சைமர் என்ற நோய் வந்து கொஞ்சம் கொஞ்சமாய் ஞாபகங்கள் மறைய ஆரம்பிக்க.. கண்களிலில் க்ண்ணீர் மழையை உங்களால் கட்டுபடுத்த முடியாது.

அவரின் தந்தையாக நெடுமுடி வேணு, மனுசன் சும்மா பின்னியிருக்கார். ஓரு முறை ஊருக்கு வரும் மோகன்லால் உயரமான வீட்டுக்கு படிக்க்ட்டு ஏறுவதற்கு சுலபமாய் மண அடித்து ரோடு போட்டு மேடு பண்ணி உன் முட்டிக்கு ரெஸ்ட் கொடுக்கணும்ன்னு சொல்ல, அதே வீட்டிற்கு முழு குழந்தையாய் மோகன்லாலை வேலை முடிந்து மேடு செய்த வீட்டின் வாசலில் வண்டி நிற்க, காரை விட்டு இறங்காத வேணு எந்த வித ப்ளாஷ்கட்டும் இல்லாமல் தன் கண்களில கண்ணீர் சேர்ந்து நிற்க. பார்க்கும் பார்வையிலேயே ஆயிரம் காட்சிகள் ஓடும்.

மோகன்லாலின் நண்பனாக ஜெகதி.. மனுசனுக்கு, காமெடியும் வரும், குணசித்திரமும் வரும்..மோகன்லாலின் சின்ன வயது நட்பான சீதா.. மனைவி மீரா வாசுதேவன்.. என்று யாரையும் சும்மா சொல்லிவிடமுடியாது..

எல்லோரையும் விட பாராட்ட வார்தைகளே கிடைக்காத ஓருவர் இயக்குனர் ப்ளசி..நிஜமாகவே அவரிடம் நேரில் பேச வாய்ப்பு கிடைத்தபோது என்னால் பேச முடியவில்லை. எவ்வளவோ ஜாம்பவான்களூடன் நான் பேசியிருக்கிறேன். என்னவோ தெரியவில்லை. என்னால் முடியவில்லை.

சினிமா பார்த்து நான் அழுவது என்பது பல நேரங்களில் எனக்கு சிரிப்பாய் இருந்திருக்கிறது…அங்கும், இங்கும் சில நேரங்களில் நெகிழ்ந்திருக்கிறேன்.. ஆனால் படம் முழுவதும் நெகிழ்ந்தும், உருகியும், பொல..பொலவென்று அழுதும் படம் பார்த்ததில்லை..

படத்தில் வரும் பலகாட்சிகளை பற்றி உங்களிடம் பகிந்து கொள்ள முயன்று எழுத ஆரம்பித்தேன்.. ஆனால் என்னால் முடியவில்லை.. படத்தின் காட்சிகளை நினைக்கும்போது என்னால் கண்கலங்காமல் இருக்க முடியவில்லை..

ம்…ஹூம்..எ.வ.த.இ.மா.படம்?

அலிபாபா – விமர்சனம்

ஒக்ரோபர் 16, 2008


தமிழ் சினிமாவில் இந்த மாதம் திரில்லர் மாதம் போலிருக்கிறது. மற்றுமொரு திரில்லர் அலிபாபா. திருட்டையே வாழ்க்கையாய் வைத்திருக்கும் கதாநாயகன் கிருஷ்ணா, திருடுவதை நியாயப்படுத்தும் அவரது அப்பா பிரகாஷ்ராஜ்.

ஓரு பெண்ணின் மேல் விருப்பபட்டு தன் திருட்டு தொழிலை விட நினைக்கும் போது, கிருஷ்ணாவின் அக்கவுண்ட்டில் லட்ச கணக்கில் பணம் விழ, அவர் அதை எடுத்து செலவு செய்ய ஆரம்பிக்கிறார். ஓரு கட்டத்தில் அவர் மீது கமிஷனர் கொலை பழி விழுகிறது. அந்த பிரச்சனையில் அவரது அப்பா இறந்து போகிறார். இதையெல்லாம் எப்படி வீழ்த்தி வெளிவருகிறார் என்பது தான் மீது கதை.

ஆரம்பம் முதலே கிருஷ்ணாவை ஆக்ஷ்ன் ஹீரோவாக காண்பிக்க வேண்டும் என்ற கட்டாயத்தினிலால் அவரை திருடனாகவும், புத்திசாலியாகவும் காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இயக்குனர் இருப்பதால் அந்த கேரக்ட்ர் பிரச்சனையில் மாட்டும் போது அவர் மீது பரிதாபத்துக்கு பதிலாக ஓரு வெற்று உணர்வே தோண்றுகிறது.

கிருஷ்ணா ,ஹீரோயின் ஜனனியின் பைக்கை திருட, அதே பைக்கை தண்ணியடிப்பதற்காக, ஓரு வீட்டின் வாசலில் வைத்துவிட்டு போவதும், அந்த வீடு ஜனனியின் வீடாய் இருப்பது, அவரது வீட்டிலேயே திருடப்ப் போய் மாட்டிக் கொள்வதும் சுவை.

அதே போல் பிரகாஷ் ராஜ் மூண்று பேரில் ஓருவனை தேர்ட் மேனாக வைத்து கொண்டு எப்படி ஓரு பிக்பாக்ட்டை அடிப்பது என்பதை விளக்கும் நேர்த்தியிருக்கிறதே சிம்ப்ளி சூப்பர்ப்.
அதே தேர்ட் மேன் நிலைமையில் தன் மகன் இருப்பதை உணர்ந்ததும், அவரை காப்பாற்ற் அவர் கமிஷனர் வீட்டில் திருடுவதும், அதில் மாட்டிக் கொண்டு தப்பிக்கும் போது இறந்து போக, கிருஷ்ணாவுக்கு தன் தந்தையை கொலை செய்தவனை பழிவாங்கும் கடமையும் வர, வீறு கொண்டு எழுகிறார்.

கிருஷ்ணாவுக்கு ஓரளவுக்கு ஆட வருகிறது. மற்றபடி நடிக்க இனிமேல் தான் முயற்சி செய்ய வேண்டும்.ஜனனிக்கு ஓன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

ஆரம்பம் முதல் கமிஷன்ர் மீதும், அவர் இறந்த்தும் டி.சிமீதும், என்று காயை நகர்த்தும் இயக்குனரின் திரைக்கதை பாராட்டவேண்டியது.

வர வர வித்யாசகர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. இந்த படத்திலும் அவரை காணோம்.

கணேஷ்குமாரின் ஓளிப்பதிவு மிகவும் சுமார் ரகம். சத்தம் போடாதே ஓளிப்பதிவு செய்தவரா இவர்?

கிருஷ்ணா டிசியின் குடும்பத்தை கடத்தியிருப்பதாக கூறி அவரை அங்கே இங்கே அலையவைப்பதும், டிசி அதற்காக ஓடியே அந்த அந்த இடங்களை அடைவதும், ஓரே தமாஷ், ஓரு ஆட்டோ தட்டி நிறுத்தினால் போக முடியாதா?

மொத்ததில் ஓரு half baked thriller

யானை கொம்பனும்.. ஏதோ ஓரு ….யபாரதியும்..

ஒக்ரோபர் 15, 2008


எனக்கென்னவோ அவ்வளவு ஆர்வம் இல்லாதது மாதிரி காட்டிக்கொண்டேன்.. யாராவது பார்த்துவிட்டால்.. “யாரும் பாக்கமாட்டாங்கடா..” என்றான் சேகர்.. எங்கள் குருப்புக்கு வஸ்தாது..பார்த்தால் சோனியாய் இருப்பான், ஆனால் செய்கிற வேலையெல்லாம் சோனி டிவிமாதிரி பெரிசாத்தான் இருக்கும்.

நான், சேகர், சண்முகம் ஆகிய மூவரும் ரொம்ப நெருக்கம்.. நானும்,சண்முகமும் ஓரே ஏரியா…ஆனால் சேகர் தண்டையார்பேட்டை..அவனிடம் ஓரு வசீகரம் இருந்த்து.. கதை அவனை பற்றியல்ல.. நாங்கள் மூவரும் முதல் முதலாய் பிட்டு படம் பார்க்க போக ப்ளான் செய்த்தை பற்றி தான் .

எனக்குன்னு என்னுடய் செட்டில் சுமாராய் படிப்பவன் என்ற இமேஜ் இருந்ததால், நான் இந்த மாதிரி படத்துக்கெல்லாம் தெரிந்தால், “வதனி” என்ன நினைப்பாள் என்றெல்லாம் தோண்றியது. அதையெல்லாம் சேகரிடம் சொல்லவில்லை..தீவரமாய் ஐ.எஸ்.ஐ ஏஜெண்ட் கணக்காய் சுற்று வட்டாரத்தில் எங்கெல்லாம் அந்த மாதிரி தியேட்டர் இருக்கிறது என்ற லிஸ்டை தயார் செய்தோம்.. என் காலேஜிலிருந்து பக்கத்தில் இருந்த்து அனகாபுத்தூர் அங்கே ஓரூ தியேட்டர், அலந்தூர், என்று பக்கத்தில் உள்ள தியேட்டரை எல்லாம் லிஸ்ட் எடுத்து.. ராமகிருஷ்ணா போகலாம் என்று ப்ளான் செய்தோம்..

பஸ்ஸில் போகும் போது ராமகிருஷ்ணாவின் போஸ்டரில் ஏதோ காமுகன் என்ற டைட்டிலில் உள்ளே இருப்பதையெல்லாம் பிதுக்கியபடி போஸ்டரில் இருந்த அந்த நடிகையை பார்த்து, மனசுக்குள் ஓரு கிளூகிளூப்பு ஏற்பட்டது.. நாங்கள் மூவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டோம்.. பஸ்ஸில் கொஞ்சம் புஷ்டியாய் இருந்த அம்மணிகளை பார்த்தால் போஸ்டர் நினைவுக்கு வந்தது.

ஓரு வழியாய் தியேட்டர் வாசலில் போய் நின்றால் வாசலில் ஓரு போர்ட் வைத்திருந்தார்கள் ஏதோ ஜெனரேட்டரோ.. புரஜெக்டரோ ப்ராப்ளம் என்பதால் ஷோ கேன்சல் செய்திருப்பதாக.. மூண்று பேருக்கும் “சேது சமுத்திர திட்டம்” கெட்டு போனதை போல ரொம்ப வருத்தமா இருந்திச்சு.. பக்கத்தில் வேறு ஏதாவது தியேட்டர் இருக்குமா ? என்று மனசில் நினைக்க, சேகர் மச்சான் கிளம்பினது கிளம்பிட்டோம் .. படம் பாக்காம போகறதில்ல.. வாடா எங்க ஏரியாவுல ஓரு திருவெற்றியூர்ல ஓரு தியேட்டர் இருக்கு. நம்ம ஏரியாவாச்சேன்னு போவாணாம்ன்னு பாத்தேன்.. கிளம்பு” என்று ஒரு படை தளபதி போல முடிவெடுத்து திருவொற்றியூருக்கு பஸ் பிடித்து கிளம்பினோம்..

ஓரு பிட்டு படம் பார்பதற்காக இவ்வளவு அலைச்சலா என்றெல்லாம் தோண்றவில்லை.. எடுத்த குறிக்கோளில் உறுதியாய் எங்கள் வீர பயணம் செய்து தியேட்டர் அருகில் இறங்கினோம்.. தியேட்டர் வாசலில் ராஜேந்தர் நின்று கொண்டிருந்தார். நான் சேகரை சந்தேகத்துடன் பார்க்க,, ம்ச்சான் தியேட்டர் இது இல்லடா கொஞ்சம் உள்ள போணும். அந்த தெரு ஓரு அகலமான நீண்ட தெரு.. நடுவில் ஏதோ ஓரு அம்மன் கோயில் இருந்த்து.. அந்த கோயிலை சுற்றி “ப” வடிவில் தெரு இருக்க, சுற்றிலும் வீடுகள், கோயிலின் நேர் பின்புறம் தியேட்டர்..(சாமி பட தியேட்டர் கோயிலுக்கு பின்னாலே..) தியேட்டர் வாசலில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் ஓரே பெருசுகள் சிகரெட் பிடித்து கொண்டிருந்தார்கள். “யானை கொம்பன்” ப்ரேம் நசீர் நடித்த படம்.. 6ரூபாய் பால்கனி டிக்கெட். சிறிது நேரத்தில் சுற்றி பார்த்தால் ஓரளவுக்கு கூட்டம் வந்திருந்த்து.

படம் ஆரம்பித்தவுடன் ப்ரேம்நசிர் ஓரு கிராமத்தில் யானை வளர்த்து வருகிறார்.ஜயப்ப பக்தர்.படத்தில் முண்டு கட்டிக் கொண்டு வரும் ஏதோ ஓரு பாரதியை பார்த்து.. “இதுதான் பிட்டா சேகரு” என்றேன். சேகர் எற்கனவே பார்தவன் போல சேச்சே அதெல்லாம் தனியா காட்டுவாங்க..என்றான்.

சிறிது நேரத்தில் ரசிக கண்மணிகள் ப்ரேம்நசிர் சாமி கும்பிடும் காட்சியில் கைதட்டி விசிலடிக்க ஆரம்பித்தார்கள்.. படம் கட் ஆகி ஓரு அட்டு பிகர் திருமலைநாயக்கர் தூணுக்கு கோவணம் கட்டிய மாதிரி மெலிதான வெள்ளை துணியில் குளிக்க ஆரம்பித்தாள்.. தியேட்டர் முழுவதும் மயான அமைதி.. சூடும் ஏறியது போல் இருந்த்து.. ஆனால் என் உடம்புக்குள் ஏற்பட்ட சூடு என்பது பிற்பாடு தெரிந்த்து. அவள் கொஞ்சம் கொஞ்சமாய் தண்ணீர் ஊற்றி, குளிக்க.. எங்களுக்கு வேர்த்து.. கையை..சாரி பையை வைத்து அழுத்தியபடி பார்க ஓரு வழியாய் தன்னுடய மேலாடையை (அப்படின்னு ஓண்ணு இருந்த்தா?)
கழட்டிவிட, அவ்வளவு பெரிய.. பார்த்து விதிர்த்து போய் என்னன்னு புரிவதற்குள் முடிந்து இண்டர்வெல் விட்டார்கள்..

நாங்கள் மூவரும் தேண் குடித்த நரி போல் ஓருத்தரை ஓருத்தர் பாத்து கொண்டோம்.. “மச்சான் வெளிய போவாணாம். எங்க ஏரியா தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா? பிரச்சனை..என்றான் சேகர்..உடனடியாய் பாத்ரூம் போக வேண்டிய நிர்பந்தம் இருந்தாலும், நண்பனின் பாதுகாப்பு கருதி அடக்கி கொண்டேன்.


இண்டர்வெல் முடிந்து ஓரு பத்து நிமிடம் திரும்பவும் ப்ரேம் நசிர் முதல் சீனிலிருந்து போட்டார்கள்.இம்முறை ரசிக கண்மணிகள் கைதட்டல்,விசிலில்,, நாங்களும் ஐக்கியமானோம்..ஓரு முறை தட்டினோம் , இரண்டாவது தடவை தட்டினோம்.. மூண்றாவது முறை தட்டிய போது எங்கள் கைத்ட்டல், விசில் மட்டுமே கேட்டது.சுற்றி பார்தால் யாருமே இல்லை.. சம்மந்தமேயில்லாமல் டக்கென்று படத்தை நிறுத்தி முடித்துவிட்டார்கள்.. சேகர் முதலில் வெளியே வந்து சுற்றும் முற்றும் பார்த்து தியேடரிலிருந்து வெளியே வர.. எங்களுக்கு எந்த பயமும் இல்லாததால் அசால்டாகவே வந்தோம்.

பஸ்ஸ்டாண்டு அருகில் வந்த்தும் திரும்பவும் காலேஜூக்கு போகலாம்னு பஸ்ஸுக்கு காத்துகிட்டு இருந்த போது.. சண்முகத்தின் தலை மேல பட்டென்று அடிவிழுந்த்து.. திரும்பி பார்த்தால் அவன் சித்தப்பா.. நாங்கள் எல்லாம் ஸ்டாப் ப்ளாக்கில் எஸ்கேப்பாக.. அடுத்த நாள் காலையில் சண்முகத்தை ரயில்வே ஸ்டேசனில் பார்த்தபோது என்னடா ஆச்சு..ன்னு கேட்டேன்..

நான் படம் பாத்ததை வீட்ல சொன்னீங்கன்னா.. நீங்க படம் பாத்த மேட்டரை நானும் சொல்வேன்ன்னு சொன்னேன்… அவரு போயிட்டாரு..

அவரும் படம் பார்த்தாரா மச்சான்?

யாருக்கு தெரியும் என்றான் சண்முகம்..

சரோஜா – விமர்சனம்

ஒக்ரோபர் 12, 2008

ஓரு பரப்பரப்பான காமெடியும், ஆக்‌ஷனும் கலந்த திரில்லரை பார்த்து ரொம்ப நாளாச்சா? அப்ப சரோஜா சரியான படம். வெங்கட் பிரபு டீமோட சென்னை-28 வெற்றி ஓண்ணும் சும்மா வந்ததில்லைன்னு புரூப் பண்ணியிருக்காங்க.

ஓரிசாவிலிருந்து ஓரு கெமிக்கல் லாரி கிளம்புகிறது. இன்னொரு இடத்தில் பணக்கார ப்ரகாஷ்ராஜ் பெண் வீட்டிலிருந்து வெளியேறி கடத்தபடுகிறாள். ஹைதராபாத்தில் நடக்கும் இந்தியா பாக் மாட்சை பார்க்க, spb ச்ரண், ப்ரேம்ஜி அமரன், சிவர், மற்றும் அவரின் தம்பி, நால்வரும் ஓரு பழைய காரவனில் கிளம்புகிறார். இந்த மூண்றும் இணைகிற இடம் தான் சரோஜாவின் முக்கிய புள்ளி.

படத்திற்கு மிகப் பெரிய பலம், ஓளிப்பதிவாளர் சக்தி சரவணனும்,யுவனும் (இருவரும் படத்தில் நடித்தும் இருக்கிறார்கள்). அது தவிர படம் முழுக்க விரவி இருக்கும் நகைச்சுவை, சாதாரணமாக திரில்லர் கதைகளில் நடுவில் நகைச்சுவை இருந்தால் டெம்போ போய்விடும் என்று சொல்வார்கள். ஆனால் வெங்கட் பிரபுவுக்கு தன்னுடய தம்பியின் பலம் தெரிந்து இருக்கிறது. அவரை வைத்து அவர் அடிக்கும் லூட்டி இருக்கிறதே.. அவர்களுடனே ஓடிக் கொண்டிருக்கும் பரபரப்புக்கு நடுவுல் சிரிக்காமல் இருக்க முடியாது.

ப்ரேம்ஜி ஓவ்வோரு பெண்களை பார்த்தும், ஆயிரம் தாமரை மொட்டுகளே.. ட்யூனுடன் வெள்ளை நிற தேவதைகள் வருவதும், அதற்கு அவரின் ரியாக்‌ஷனும் சும்மா சொல்லக்கூடாது. தம்பி உடையான் ப்டைக்கஞ்சான்.


சரணின் இயல்பான நடிப்பை பற்றி சொல்லியே ஆகவேண்டும், ஓவ்வொரு சிச்சுவேசனிலும் அவரின் ரியாக்‌ஷ்ன்கள் அருமை அதிலும் பெண்டாட்டியிடம் திட்டு வாங்கும் இடத்தில் ..படத்தை பாருங்க அப்ப தெரியும்.

ப்ரேம்ஜி அமரன் அவரை பத்தி சொலலவே தேவையில்லை.தன்னுடய தம்பியின் பலம் எதுன்னு தெரிஞ்சு அவரை இயல்பா பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

இயக்குனர் படம் நெடுகிலும் அவர் பயன்படுத்தியிருக்கும் நகைச்சுவை மிக இயல்பாக இருக்கிறது. அதுவும் இளைஞர் நால்வரின் பேச்சுக்கள்.

படத்தில் சென்னை 28 நடித்த் பலர் ஓரு ஓரு காட்சிகளில் தலை காண்பித்து இருக்கிறார்கள். பிரகாஷ்ராஜ் படம் முழுவதும் டென்ஷனாகவே இருக்கிறார். ஜெயராமிற்கு கடைசி காட்சியில் தான் நடிக்க சான்ஸ் அதை முழுதாக் பயன்படுத்தியிருக்கிறார்.

வில்லன் சம்பத், அவரின் காதலியாக வரும் நிகிதா, அவரது அடியாளாக வரும் நாகேந்திரன் என்று யாரையும் குறை சொல்ல முடியாது.

ஓரு நல்ல ஜாலியான திரில்லரை பார்கக தயாராகுங்கள்.

பத்து பத்து – விமர்சனம்

ஒக்ரோபர் 12, 2008


நான் சமீபத்தில் பார்த்த இன்னொரு படம் பத்து பத்து. அதில் நடித்த ஓரு நடிகர் என்னையும் என் நண்பர்களையும் அழைத்துச் சென்றார். இரண்டாவது நாளான அன்று மாலை காட்சியில் சுமார் 400க்கும் அதிகமான நபர்கள் தியேட்டரில் இருந்தது குறித்து ஆச்சர்யப்பட்டேன்.

எதை எதிர்பார்த்து இவ்வளவு கூட்டம்? ஹீரோ ஹீரோயின் இல்லாத படம் என்று விளம்பரபடுத்தியதாலா? அல்லது வித்யாசமான படமாய் இருக்கும் என்ற எண்ணத்தினாலா? என்று குழம்பியவாறே நான் படம் பார்க்க ஆரம்பித்தேன்.

சரியாக 10.10 ஓரு கொலை நடைபெறுகிற்து. அந்த கொலையை யார் செய்திருக்கக்கூடும் என்று பல கோணங்களில் இன்வெஸ்டிகேசன் செய்கிறார் “போஸ் வெங்கட்” ஓவ்வொருவரையும் அவர் விசாரிக்கும் போது இவர்தானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருப்பது திரைக்கதையில் ஓரு நல்ல உத்தி,

ஆரம்பத்தில் அமெச்சூர் தனமான காட்சியமைப்புகள், நடிப்பு, என்று ஆரம்பித்த படம், சோனா வந்தவுடன் சும்மா பாட்டிலிலிருந்து விடுபட்ட தீபாவளி ராக்கெட் போல் சும்மா விர்ரென்று கிளம்புகிறது படம்.

அதுவும் ஓரு பையன் மேலே பேனை மாட்ட,கீழே சோனா விலகிய மேலாக்குடன் லஞ்சையுடன் மேலே பார்க்க, அதை பார்த்து அவள் வீட்டிலிருக்கும் ஓரு பையன் வெகுண்டெழுந்து அவனை துரத்திவிட்டு, “இனிமே உங்களுக்கு எதாவது வேணும்ன்னா என்னை கேளுங்க”ன்னு சொல்வது, அதற்கு சோனாவின் ரியாக்ஷனும்,பார்த்த பிறகு தான் எனக்கு புரிந்தது எப்படி 400 பேர்கள் தியேட்டருக்குள் வந்தார்கள் என்று.

ஆனால் இதையெல்லாம் மீறீ படத்தின் திரைக்கதையில் இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பாகி, யாரும் எதிர்பார்க்காத வகையில் முடிகிறது.

ஓரு நல்ல திரில்லர் அவர்கள் எடுத்த முறையினால் B கிரேட் திரில்லராகிறது.

படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும் சோனாவுக்கு ஓரு ஸ்பெஷல் “ஜே” போடுங்க…

Happy Days

ஒக்ரோபர் 11, 2008


ஜலதோஷம் பிடிக்குமே.. என்று கவலைப்படாமல் மழையில் நினைந்திருக்கின்றீர்களா? அந்த நாள் உங்களின் ஹேப்பி டேஸாக இருக்கும். வாழ்கையில் இப்போது சின்ன விஷயங்களாய் தெரியும் விஷயத்துகெல்லாம் சந்தோஷமும், துக்கமும் கலந்து கட்டி மத்தாப்பாய் சிரித்தும், வெடித்தும் மகிழ்ந்திருக்கின்றீர்களா? அந்த நாட்கள் உங்களின் கல்லூரி நாட்களாய் தான் இருக்கும் அந்த ஹேப்பி டேஸை உங்களால் எப்பவுமே மறக்க முடியாது. வாழ்கையில், படிப்புடன் நட்பை, காதலை,லீடர்ஷிப் போன்ற பல விஷயங்களை கற்று தரும் நாட்கள் தான் கல்லூரி காலமான ஹேப்பி டேஸ். சமீபகாலத்தில் நீங்கள் இவ்வளவு இளமையான திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டீர்கள்..

படத்தின் ஆரம்பமே ஓரு அழகான விஷயம்.

தூங்கி எழும் சந்து முதல் முதலாய் இன்ஜினியரிங் காலேஜ் போக போகிறான். அவன் அப்பா அவனை கூப்பிடுகிறார். ஓரு பேனாவை கொடுத்து ‘ இது என் அப்பாவின் பேனா . அவர் எனக்கு கொடுத்தது. இப்போது உனக்கு கொடுக்கிறேன்.” என்று சொல்ல.. அதற்கு அவன் மனதிற்குள் “நல்லவேளை.. அட்வைஸ் இல்ல..; ஓன்லி செண்டிமெண்ட் “ நினைப்பதில் ஆரம்பித்து.. அந்த வயது இளைஞர்களை கண் முன் ஓடவிட ஆரம்பிக்கிறார் இயக்குனர் சேகர் கம்மூலா..

மேல் தட்டு குடும்பத்திலிருந்து வரும் அழகான மது. (சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம் கதை நாயகி மதுவிக்கு சரியான் பொருத்தம்.. அவர் தான் நடிக்கிறார்.)

அதிபுத்திசாலியான ரொபாடிக்ஸில் ஆர்வம் உள்ள அப்பாவியான டைசன்..

ஏழை குடும்பத்திலிருந்து சீட் கிடைத்து எப்படியாவது முதல் மாணவனாக வேண்டும் என்ற வெறியோடு சேரும் செல்ஃபிஷான சங்கர்.

டொனேஷன் சீட்டில் காசு கொடுத்து சேரும் புரத்ட்டூர் எம்.எல்.ஏ. பையன் ராஜேஷ்.

தன் அழகை பற்றி, அவ்வளவாக கவலைபடாடத, ஆண்பிள்ளை போல் நடந்து கொள்ளூம் அப்பு என்கிற அபர்ணா.

கண்களாலேயே பேசும் சீனியர் ஷாரப்ஸ்,

ஸ்ரீகாக்குளத்திலிருந்து, தெலுங்கு மீடியத்திலிருந்து வரும் மாணவன், வெளிவட்டார பழக்கமே இல்லாமல் வீட்டிலிருந்தே படித்து காலேஜிக்கு வரும் பாண்டு, குண்டு சீனியர், ஜூனியர் மதுவை காதலிக்கும் சினியர் கேரக்டர்கள் என்று எல்லா கேரக்டர்களும் நாம் பார்த்து, மகிழ்ந்த நண்பர்கள் போலவே தெரியும்.

இவர்களுக்குள் நடக்கும் அந்த நாலு வருட வாழ்கை அவர்களுக்கு என்ன என்ன கற்று தருகிறது என்பதை அவ்வளவு இயல்பாய் சொல்லியிருக்கிறார். இவர்கள் எல்லோரும் நட்பு எவ்வாறு உருவாகி இருக்கமாகிறார்கள்? சந்துவிக்கும், மதுவிக்கும், அப்புவுக்கும் ராஜேசுக்கு, டைசனுக்கும் சீனியர் ஷாரப்ஸுக்கும், சங்கருக்கும், சங்கீதாவுக்கும் இடையில் ஏற்படும் காதல், அதற்கு அப்புறம் நடக்கும் ஊடல், மோதல், அவர்களின் உறவு பலப்படுதல்,அந்த உறவின் காரணமாய் அவர்கள் வாழ்கையில் பெரும் வெற்றி தோல்விகள் என்று படம் முழுவதும் வாழ்ந்த உணர்வு உங்களுக்கு வந்தே தீரும்

சங்கரின் காதலி சங்கீதாவின் வரவால் நன்றாய் படிக்கும் மாணவன் அரியர்ஸ் வைப்பதும், அவள் அவனை ஏமாற்றி கொண்டிருக்கிறாள் என்று தெரிந்த டைசன், அவனுக்காக தன்னுடய கம்ப்யூட்டர் சயின்ஸ் குருப்பை விட்டு கொடுத்த டைசன், அவளை நம்பாதே என்று சொல்லும் போது அவன் டைசனை அடிக்க, அவன் ஓரு செல்பிஷ் என்று தெரிஞ்சிகிட்டே அவனுக்கு போய் அட்வைஸ் பண்றியே அவனுக்கு பிரண்ட்ஷிப் வேல்யூவே தெரியாது என்று சந்து சொல்ல.. அப்போது டைசன் அவனுக்கு தெரியலைன்னா என்ன நாம அவனுக்கு பிரண்ட்தானே என்று சொல்லும்போது கண்கலங்காமல் இருக்க முடியாது.

பார்க்கும் பெண்களையெல்லாம் காதலிக்கும் ராஜேஷ், அவனுக்கு ஹெல்ப் பண்ணும் அப்பு, இடையில் வரும் இங்கிலீஷ் லெக்சரர் கமலினி முகர்ஜி.. என்று கலந்து கட்டிய ஓரு சுகானுபவம்.. படத்தில் அங்காங்கே ஃபாண்டஸியாய் காட்சிகள் வந்தாலும் அந்த வயதில் பாண்டஸியில்லாத வாழ்கை இருந்திருக்குமா?

சந்துவிக்கும், மதுவுக்கும் இடையே காதல் அரும்புவதற்கு முன்பே அவளை கிஸ் கேட்க, அவளின் அப்பா.. அதை கேட்டு விட அதனால் அவமானம் அடையும் மது என் தந்தையிடம் மன்னிப்பு கேட்ட்டல்தான் என்று சொல்ல.. என்னனு மன்னிப்பு கேட்க, உங்க பொண்ணு கிட்ட கிஸ் கேட்டேன் சாரி ன்னா. அது என்னால் முடியாது.. என்பதில் ஆரம்பித்து ஈகோவினால் இருவரும் இரண்டுவருடத்திற்கு பேசாமல் ஓன்றாகவே இருப்பதும், புதிய ஜூனியர் பெண் சந்துவுடன் பேசுவதை பார்த்து பெருமுவதும், அழகான கவிதை..

ஜூனிய்ர் டைசனுக்கும், சீனியர் ஷராப்ஸுக்கும் இடையில் ஏற்படும் காதலை ஏற்றும் ஏற்காமலும் தன்னுடய கோல் வேறு எதிலும் நான் கட்டுபட்விரும்பவிலலை என்றும், டைசன் அவளுக்குகாக் எங்கும் போனாலும் எனக்காக ஓரு சான்ஸ் வரும் வரை காத்திருப்பேன் என்பதும். இந்த காட்சியில் காதலை சொல்லி, அல்லது சொல்லாமல் நாம் காலேஜில் வாழ்ந்த காலங்களை உங்கள் கண் முன் வரவில்லை என்றால் அது மிகப் பெரிய பொய்.

இவர்களின் காலேஜ் வாழ்கையின் முடிவில் கல்லூரி முதல்வர் அவர்களை அழைத்து, இதுநாள் நீங்கள் வாழ்ந்தது உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஹேப்பி டேஸ்.. இத்தோட முடிய போகுது.. இனிமே வரப்போற் நாட்கள் உங்க்ள் வாழ்வில் ஏற்படப்போகும் பர்பஸ்புல் டேஸ். என்பது நிதர்சனமான உண்மை என்பதை நாம் கல்லூரியின் கடைசி நாள் அன்று உணர்ந்திருப்போம்.

அற்புதமான ஓளிப்பதிவு, மைக்கேல்.ஜே.மேயரின் அற்புதமான இசை, நடித்த அனைவரும் புதுமுகங்கள். என்று சத்யம் செய்தால் தான் நம்புவீர்கள்.. கமலினி முகர்ஜி தவிர.. இயல்பான வசனங்கள்.. மனதை வருடும் ரிரிக்கார்டிங்.. அற்புதமான இயக்கம் என்று எதையுமே குறை சொல்ல முடியாத படம்.

படத்தை பார்த்தவர்கள் காலேஜ் என்றால் நட்பு, காதல், இதைதவிர வேறேதும் கிடையாதா.. இதையெல்லாம் பெரிய ப்ராப்ளமா என்று கேட்பவர்களுக்கு உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.. நீங்கள் படிக்கும் போது எதிர்கால இந்தியா பற்றியா நினைத்து வாழ்ந்திர்கள் என்று.. படத்தை பார்க்கும் போது அவர்களின் வாழ்கையாய் படத்தை பார்த்தால் இழந்த ஹேப்பிடேஸை நமக்கு கொண்டுவரும் படம்.. அட்லீஸ்ட் நிஜத்தை மற்கக…

இயக்குனர் சேகர் கம்மூலாவை பற்றி..

அமெரிக்காவில் வேலை செய்து கொண்டிருந்த இவர் திரை துறையின் மேல் உள்ள் ஆர்வத்தால் வேலையை விட்டு முதல் முதலாய் “டாலர் டிரீம்ஸ்” என்ற படத்தை இயக்கினார். அதில் அவருக்கு ஓரு அடையாளம் தெரிய, அடுத்து, “ஆனந்த்” என்ற் ஓரு இனிமையான படம், அதற்கு அப்புறம் “கோதாவரி’என்ற ஓரு அருமையான் காதல் கதை, இப்போது “ஹேப்பி டேஸ்” அடுத்த படத்துக்க்காக ஆவலாய் காத்திருக்கிறேன்..

டிஸ்கி : Happy days படத்தை தமிழில் தயாரிப்பதாய் பிரகாஷ்ராஜ் உரிமை வாங்கி வைத்துள்ளார். ஓளிப்பதிவாளர் குகன் இயக்குவதாய் இருந்தது, அது என்ன ஆனது என்றே தெரியவில்லை. ப்ரகாஷுக்கு இருக்கும் பணப்ப்ரச்சனையில் அது நடக்குமா என்றும் தெரியவில்லை..